கலோரி குறைந்த, நார்ச்சத்து அதிகமுள்ள கீரைகள் பொதுவாகவே உடலுக்கு நன்மை பயக்கும் உணவாகும். புதிதாகப் பறிக்கப்பட்ட கீரைகள் ஊட்டச் சத்து நிறைந்தவை. கீரைகள் உடல் பருமனைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற உணவாக உள்ளன.
வெந்தயக்கீரை
வெந்தயமும் அதன் கீரையும் கசப்பானவை. ஆனால், ஊட்டச்சத்து நிறைந்தவை.
வெந்தயக் கீரை நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது. எடையைக் குறைக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதயம், ரத்த அழுத்தம் தொடர்பான சிக்கல் உள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும்.
முள்ளங்கிக் கீரை
முள்ளங்கிக் கீரையை பலரும் உண்பதில்லை என்றாலும், இவை சத்தும் சுவையும் நிறைந்தது. இது குறைவான கலோரிகளைக் கொண்டுள்ளது. 100 கிராம் முள்ளங்கிக் கீரையில் 16 கலோரிகள் மட்டுமே உள்ளது. இக்கீரை வளர்சிதை மாற்றத்திற்கு ஏற்றது.
கடுகுக் கீரை
வைட்டமின் சி, நார்ச்சத்து நிறைந்த, குறைந்த கலோரி கொண்டது. எடை குறைக்க உதவுகிறது. 100 கிராம் கடுகுக் கீரையில் 27 கலோரிகள் உள்ளன.
பசலைக் கீரை
பலரும் விரும்பிச் சாப்பிடும் இது, ஊட்டச்சத்து நிறைந்த கீரை.
100 கிராம் கீரையில் 23 கலோரிகளும் 99 மில்லி கிராம் கால்சியமும் உள்ளது. பெண்களுக்கும் வயதானவர்களுக்கும் மிகவும் ஏற்றது.
எனினும் பெரும்பாலான கீரை வகைகள் செரிமானம் ஆக தாமதம் ஆகும் என்பதால் இரவு நேரத்தில் கீரை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பகல் உணவில் கீரை சேர்த்துக் கொண்டால் போதுமானது.