கார்த்தி நாயகனாக நடிக்க, முத்தையா இயக்கியுள்ள படம் 'விருமன்'. இதில் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தொழில்நுட்பப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்நிலையில், 'விருமன்' படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிட அதன் தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக முன்னணி ஓடிடி தளங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திரையரங்குகளில் ஐம்பது விழுக்காடு இருக்கைகள் மட்டுமே நிரப்பப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் படங்களின் வசூல் குறையும் என்பதால் திரையரங்குகளுக்குப் பதிலாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட பல தயாரிப்பாளர்கள் விரும்புகின்றனர்.
இந்நிலையில், தொடக்கம் முதலே ஓடிடி தளங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தவர் சூர்யா என்பதால் அவர் தயாரித்துள்ள படத்தை நல்ல விலைக்கு வாங்க ஓடிடி நிறுவனங்கள் முன்வந்துள்ளனவாம்.