அரசுப் பேருந்து சிறைபிடிப்பு: தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள் தவிப்பு

சேலம்: அரசுப் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்ததால் தேர்வு எழுதச் சென்ற 10ஆம் வகுப்பு மாணவர்கள் தவிப்புக்குள்ளாகி னர். குடியாத்தம் அருகே உள்ள கூடநகரம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் சரிவர செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கூடநகரம் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை மறியலில் ஈடுபட்டதுடன், அவ்வழியே வந்த அரசுப் பேருந்தையும் சிறைபிடித்தனர். நேற்று 10ஆம் வகுப்புக்கு கணிதப் பொதுத் தேர்வு நடந்தது. இதற்காகப் பேருந்தில் ஏறி பள்ளிக்குச் செல்ல விருந்த மாணவர்கள் தவித்தனர். எனினும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் இதைப் புரிந்துகொண்டு பேருந்தை உடனடியாக விடுவித்தனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தனது தந்தைதான் தமக்கு வழிகாட்டி என்றும், நீதிபதிகளுக்கான தேர்வில் சிலமுறை தோல்வி கண்டபோதும் இறுதியில் வெற்றி கிடைத்ததாகவும் கூறுகிறார் சேத்தன். படம்: ஊடகம்

24 Aug 2019

நீதிமன்ற ஓட்டுநராக தந்தை; நீதிபதியாகி சாதித்த மகன்

மக்களைப் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். படம்: ஊடகம்

24 Aug 2019

சோனியா காந்தி: மக்களைப் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் போராடும்