காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் துணைப்பாட நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமுற்றனர். தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
துணைப்பாட நிலையத்தில் தேர்வு நடந்துகொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 27 பேர் காயமடைந்ததாக காபூல் காவல்துறை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். மாண்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்பட்டது.
மாண்டோர் எண்ணிக்கை 33 என தலிபான் தரப்பு சொன்னது. மாண்டோரில் பல பெண் மாணவர்களும் அடங்குவர் எனச் சொல்லப்பட்டது.