ராடின் மாஸில் மெல்வின் யோங்-குமார் அப்பாவு போட்டி

மக்கள் செயல் கட்சி, தஞ்சோங் பகார் குழுத் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் என்டியுசி உதவி தலைமைச் செயலாளருமான மெல்வின் யோங்கை இந்தத் தேர்தலில் ராடின் மாஸ் தனித் தொகுதியில் நிறுத்துகிறது. திரு யோங், அரசியலில் இருந்து ஓய்வுபெறும் திரு சேம் டானுக்குப் பதில் களம் காணுகிறார்.

இத்தொகுதியில் அவரை எதிர்த்து சீர்திருத்தக் கட்சியைச் சேர்ந்த குமார் அப்பாவு போட்டியிடுகிறார். இவர்கள் நேற்று பெண்டமிர் தொடக்கப்பள்ளியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.