அல்ஜுனிட் குடியிருப்பாளர்களுக்கு ‘பர்ட்ஸ் நெஸ்ட்’ பானம்: சமூக மன்றம் விளக்கம்

அல்ஜுனிட் குடியிருப்பாளர்களுக்கு ‘பர்ட்ஸ் நெஸ்ட்’ பானத்தை (படம்) வாங்கித் தருவதற்காக மக்கள் கழகம் பொதுமக்கள் நிதியைப் பயன்படுத்தவில்லை என்று காக்கி புக்கிட் சமூக மன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

அன்பளிப்புப் பொருளாக ‘பர்ட்ஸ் நெஸ்ட்’ பானம் இருப்பதைக் காட்டும் புகைப்படம் ஒன்றுக்கும் தற்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரத்திற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று அந்த சமூக மன்றம் நேற்று விளக்கம் அளித்தது.

இரு ‘பர்ட்ஸ் நெஸ்ட்’ பான போத்தல்களில் மக்கள் செயல் கட்சி (மசெக) வேட்பாளர் ஷம்சுல் கமாரின் பெயர், புகைப்படம் பொறிக்கப்பட்ட மக்கள் கழகத்தின் பெயர் அட்டை ஒட்டப்பட்டிருப்பதைக் காட்டும் புகைப்படம் ஒன்று ‘சின் ராக் சின்’ எனும் கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

அல்ஜுனிட் குழுத் தொகுதிக்கு உட்பட்ட காக்கி புக்கிட் அடித்தள அமைப்புக்கான ஆலோசகராக திரு ஷம்சுல் உள்ளார்.

மேலும், அல்ஜுனிட் குழுத் தொகுதியில் போட்டியிடும் மசெக அணியில் அவர் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், ‘பர்ட்ஸ் நெஸ்ட்’ பானம் ஃபேஸ்புக் பதிவு குறித்து காக்கி புக்கிட் சமூக மன்றம் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது.

“பொதுத் தேர்தல் வாக்குகளைப் பெற அல்ஜுனிட் குடியிருப்பாளர்களுக்கு ‘பர்ட்ஸ் நெஸ்ட்’ பானத்தை வாங்கித் தர பொதுமக்கள் நிதியை மக்கள் கழகம் பயன்படுத்தியதாக கூறும் ஃபேஸ்புக் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வருவது எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.

“அந்த பானத்தை அடித்தளத் தலைவர்கள் நன்கொடையாக வழங்கினர் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்,” என்று சமூக மன்றம் விளக்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!