ஒப்பந்தங்கள் வழங்க பணம்: முன்னாள் அதிகாரிக்கு சிறை

ஊழலில் ஈடுபட்டு கிட்டத்தட்ட $150,000 பெற்ற முன்னாள் சாட்ஸ் நிறுவன அதிகாரி ஒருவருக்கு 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திரு லிம் கூன் சுவான்,59, சாட்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப மேற்பார்வையாளராகவும் தரைத் தள நடவடிக்ககைகள், விமானப் பயணகளுக்கு தேவைப்படும் சேவை வழங்குவது போன்றவற்றுக்கு தலைமை அதிகாரியாகவும் இருந்தார். 

அந்நிலையில் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்குவது தொடர்பில் இவர் பலமுறை லஞ்சம் பெற்றார் என்று தெரியவந்துள்ளது.

அத்துடன், இவர் மீது மேலும் 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இவை யாவும் தண்டனை விதிப்பதில் கருத்தில் கொள்ளப்பட்டன.

திரு லிம் 1982ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டுவரை சாட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார். 

அப்போது இவர் சரக்கு முனையத்தில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளை பழுதுபார்க்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தார்.

இந்த பழுதுபார்ப்பு வேலைகளை வெளியிட ஒப்பந்ததாரர்கள் பார்ப்பது வழக்கம். 

இதில் ஒப்பந்ததாரர்கள் தங்கள் பழுதுபார்ப்பு வேலைகளை சரியாக செய்து முடிப்பதை உறுதி செய்வதும் திரு லிம்மின் பொறுப்பில் அடங்கும். 

மேலும், சரக்கு முனையத்தில் அவ்வப்போது ஏற்படும் கோளாறுகளை சரிெசய்ய ஒப்பந்ததாரர்களை அணுகுவது, அவர்களை பணியில் அமர்த்துவது போன்வற்றையும் இவர் கவனித்து வந்தார். 

இந்நிலையில், திரு லிம், தமது பதவியை பயன்படுத்தி ஒப்பந்தங்கள் வழங்க தரகுப் பணம் பெற்றுகொண்டது நிரூபணமாகியுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon