ரவி: மசே நிதி பயன்பாட்டில் நீக்குப்போக்கு தேவை

கடந்த பொதுத் தேர்தலில் ஜூரோங் குழுத் தொகுதியில் மக்கள் செயல் கட்சி (மசெக) அணி சுமார் 79% வாக்குகளைப் பெற்று, ஆக அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற அணியாகத் திகழ்ந்தது.

அத்தொகுதியில் இம்முறை போட்டியிட, புதிதாக அமைக்கப்பட்ட ‘ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக்’ கட்சியின் ஐந்து நபர் அணி தயாராகி வருகிறது.

இக்கட்சியின் தலைமைச் செயலாளரான 52 வயது திரு ரவிச்சந்திரன் பிலேமோன், கடந்த பொதுத் தேர்தலில் சிங்கப்பூர் மக்கள் கட்சியைப் பிரதி நிதித்து ஹோங் கா நார்த் தனித் தொகுதியில் போட்டியிட்டவர்.இவருக்கு இரண்டு பிள்ளைகளும் ஒரு பேரப்பிள்ளையும் உள்ளனர்.

ஊடகத் துறையைச் சேர்ந்த இவர், வெளிநாட்டில் சுமார் 4 ஆண்டுகள் பணியாற்றி விட்டு 2008ல் சிங்கப்பூருக்குத் திரும்பியபோது அடையாளம் தெரியாத அளவுக்கு இங்கு மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததாகச் சொன்னார்.

அப்போது சிங்கப்பூர் உலகளாவிய நிதி நெருக்கடிநிலையில் பாதிப்புக்குள்ளாகியது.

வீடுகளை இழந்தவர்களின் வீட்டுக் கடன் பிரச்சினைகள் குறித்து இணையத் தளத்தில் எழுத தொடங்கிய திரு ரவி, நாளடைவில் அரசியல் விவகாரங்களில் ஈடுபாடு காட்டினார்.

நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து உதவி கிடைக்கிறது. ஆனால் போதுமானதாக இல்லை என்று கருதும் திரு ரவி, சில கொள்ளைகளில் நீக்குபோக்கு தேவை என்கிறார்.

உதாரணத்திற்கு, மத்திய சேம நிதிக் கணக்கில் உள்ள பணத்தை இக்கட்டான காலத்தில் ஒருவர் பயன்படுத்தும் வாய்ப்பினை வழங்கி, நல்ல பொருளாதார நிலைக்கு அவர் வந்ததும், பயன்படுத்திய தொகையைத் திருப்பக் கொடுக்கும் வசதியை ஏற்படுத்தினால் அது பயனுள்ளதாக விளங்கும் என்பது இவரது கருத்து.

“வெளிநாட்டுத் திறனாளர்களை வரவேற்கும் திறந்த பொருளாதார சூழல் சிங்கப்பூருக்கு முக்கியம் என்றாலும், வேலை வாய்ப்பு என்று வரும்போது, சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார் திரு ரவி. கொவிட்-19 கிருமித்தொற்று காலத்தில் சிங்கப்பூரர்கள் நிரந்தர வேலை கிடைக்கும் வரை வேலைப் பயிற்சி, திறன்மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றை தற்காலிகமாக ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர். ஆனால் வேலை இழந்த சிங்கப்பூரர் மனஉளைச்சலை அனுபவிக்கும் அத்தருணத்தில் நிரந்தரமான வேலை அவருக்கு கிடைப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறினார் ரவி.

இந்திய சமூகத்தைப் பொருத்தவரையில், ஒரு சிறுபான்மையினர் மறுவிற்பனைச் சந்தையில் வீவக வீட்டை விற்கும்போது, அதனை எல்லா இனத்தவரிடமும் விற்க முடியாதது என்ற கொள்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றார். ஏனெனில், குறைந்த எண்ணிக்கையில் அதனை வாங்கக்கூடியவர்கள் இருக்க, சிறந்த விலைக்கு அவற்றை விற்க முடியாமல் போய் விடுகிறது என்று அவர் தெரிவித்தார். அதோடு தைப்பூசம் அல்லது பொங்கல் பண்டிகை பொது விடுமுறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது இவரது ஆசை.

“அரசாங்கம் சரியானப் பாதையில் நாட்டை கொண்டுச் செல்வதற்கான சாதனமாக ஒவ்வொருவரின் வாக்கும் விளங்குகிறது. கொவிட்-19 காலக்கட்டத்திற்கு பிறகு, கவனத்திற்குரிய வி‌‌ஷயம் வேலைகள். குடிமக்களை இன்னும் நன்றாகப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லும் விதத்தில் அவர்கள் வாக்களிக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார் திரு ரவி. வரும் தேர்தலில் ஜூரோங் தொகுதியில் தமது கட்சி வேட்பாளர்களுடன் இவர் மசெகவின் திரு தர்மன் சண்முகரத்தினத்தின் தலைமையிலான அணியினரை எதிர்த்துப்போட்டியிடுகின்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!