இஸ்லாமியருக்கு எதிரான போக்கு ஆபத்தானது

முஹம்மது ஃபைரோஸ்

இஸ்லாமிய அண்டை வீட்டுக் காரர்களுடன் அணுக்கமான உறவை வளர்த்து சமூகப் பிணைப்பை வலுப்படுத்திக் கொள்ளும் கடப்பாடு எல்லா சிங்கப்பூரர்களுக்கும் உண்டு என உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் கூறியுள்ளார். அண்மைய தொடர் பயங் கரவாதச் சம்பவங்கள் சிங்கப் பூரில் சமூகங்களுக்கிடையே நிலவும் நம்பிக்கையை சீர் குலைத்துவிடும் அபாயம் இருப் பதால் முஸ்லிம் அல்லாத 85 விழுக்காட்டு சிங்கப்பூரர் களுக்கு அந்தக் கடப்பாடு அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.

சிங்கப்பூர் இஸ்லாமிய மையத்துக்கு நேற்று வருகை யளித்த அமைச்சர், ஆறு முழு நேர மதரசாக்களைச் (இஸ்லா மிய சமயப் பள்ளிகள்) சேர்ந்த 60 மாணவர்களுடன் கலந்துரை யாடலில் பங்கேற்றார். செய்தியாளர்கள் அனு மதிக்கப்படாத கலந்துரையா டலுக்குப் பிறகு மாணவர்களின் அக்கறைகள், கருத்துகள் பற்றி செய்தியாளர்களிடம் அமைச்சர் விளக்கினார்.

ஐரோப்பாவிலும் அமெரிக் காவிலும் தாக்குதல் நடைபெற்ற ஒவ்வொரு முறையும் முஸ்லிம் களுக்கு எதிரான தாக்குதல் கள் மும்மடங்கு உயர்ந்ததை அமைச்சர் சுட்டிக்காட்டினார். சிங்கப்பூரில் முஸ்லிம்கள் மீது அதுபோன்ற வன்முறை நிகழ்த்தப்படுவதற்கு சாத்தியம் இல்லை என்றாலும் முஸ்லிம் அல்லாதோர் முஸ்லிம்களுக்கு எதிரான மனப்போக்கை உரு வாக்கிக் கொள்ளக்கூடும் என எச்சரித்தார். "மக்கள் அதனை வெளிப் படையாகக் காட்டாவிட்டாலும் உள்ளுக்குள்ளேயே முஸ்லிம் களை வேறொரு கண்ணோட்டத் தில் பார்க்கக்கூடும். "இந்நிலைமை எழுந்தால் நமக் கிடையே பிரிவினை ஏற்படுவது டன் நாம் உருவாக்கிய சிங்கப் பூரின் ஆத்ம உணர்வு சீர் குலைந்துவிடும்," என்று அமைச் சர் எச்சரித்தார். "சமூகத்தில் இஸ்லாமியர்கள் சந்தேகப் பேர்வழிகளாக பார்க் கப்படுகிறார்களா?" என்ற அக் கறையை மதரசா மாணவர்கள் முன்வைத்ததாக திரு சண்முகம் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் இஸ்லாமிய மையத்துக்கு வருகையளித்த சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் அங்கிருந்த மாணவர்களுடன் உரையாடினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!