டாக்சியில் அடிபட்டு மாண்ட மூதாட்டி

இருபது ஆண்­டு­க­ளாக பிடோக் நார்த் வட்­டா­ரத்­தில் அட்டைப் பெட்­டி­களைச் சேக­ரித்து வந்த 78 வயது மூதாட்டி நேற்று கம்­ஃ­போர்ட் டாக்சி மோதியதில் மாண்­டு­போனார். புளோக் 123க்கு அருகில் உள்ள திறந்த­வெளி கார் நிறுத்­து­மி­டத்­துக்கு அருகில் ஒரு கடையின் பின்­பு­றத்­தில் அட்டைப் பெட்­டி­களைத் தேடிக்­கொண்­டி­ருந் தார் போ ஆஹ் ஜின். டாக்சியை நிறுத்­து­வதற்­காக பின்­பக்­க­மாக ஓட்­டிச் ­சென்ற ஓட்­டு­நர் எதிர்­பா­ராத விதமாக வேகமாக ஓட்­டி­ய­தால் கார் சாலைத் தடுப்பை­யும் மீறி மூதாட்­டி­யின் மீது இடித்­தது.

டாக்சியை முன்­னோக்­கிச் செலுத்த முற்­பட்ட ஓட்­டு­நர் மீண்டும் மூதாட்­டி­யின்­மீது இடித்­த­தாக சம்ப­வத்தை நேரில் பார்த்த டிரக் ஓட்­டு­நர் கூறினார். அருகில் இருந்த மருந்தக மருத்­து­வர்­கள் போரா­டி­யும் பல­னற்­றுப் போனது. தம்­மி­டம் போதுமான பண­மி­ருந்­தும் மூதாட்டி தொடர்ந்து அட்டைப்­பெட்­டி­களைச் சேக­ரித்­த­தாக அவரது சகோதரி குறிப்­பிட்­டார். சம்ப­வத்­தில் தொடர்­புடைய 64 வயது டாக்சி ஓட்­டு­நர் கைது செய்­யப்­பட்­டார்.

மாண்டுபோன மூதாட்டியின் சடலத்தைப் பார்வையிடும் போலிசார். படம்: தி நியூ பேப்பர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!