அமெரிக்க அரசியல்நிலை ஆசியாவுக்கும் முக்கியம்

அமெரிக்காவின் தலைமைத்துவம் ஆசியா மட்டுமல்லாது உலக அள விலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் லீ சியன் லூங் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். 'வால் ஸ்திரீட் ஜர்னல்' எனும் அமெரிக்க நாளிதழுக்குப் பேட்டி யளித்த திரு லீ, எதிர்வரும் அமெ ரிக்க தேர்தல் பற்றிப் பேசினார். "நீங்கள் உங்கள் அரசியல் முறை பற்றியும் சோதித்துப் பார்க்கும் முறையிலும் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். யார் வேண்டு மானாலும் அதிபர் ஆகலாம். இருப்பினும், அவர் தவறிழைப்பதை உங்கள் முறைகளால் தடுக்க முடியும்.

"முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை அதிபர் வேட்பாளர்களாக பலர் களம் இறங்கக்கூடும். அதிபராகத் தேர்வு பெறுபவர் நன்றாகச் செய் தால் அவர் வழியைப் பின்தொடர பலர் இருப்பார்கள். ஆசியாவில் முறையற்ற ஜனநாயக ஆட்சி நடத்துவோர் நாளடைவில் மறக்கப் படுவார்கள்," என்றும் திரு லீ பேட்டியில் குறிப்பிட்டார். மேலும் பேசிய பிரதமர் லீ, அல்=காய்தா பயங்கரவாதக் குழுவைவிட ஐஎஸ் அமைப்பி னால் ஆசிய வட்டாரத்தில் பாதுகாப்பு மிரட்டல் மோசமாக உள்ளது என்றார்.

"9/11 தாக்குதலுக்குப் பிறகு அல்=காய்தா அமைப்பில் சேர தென்கிழக்காசியாவிலிருந்து நூற் றுக்காணக்கானோர் ஆப்கானிஸ் தானுக்குச் செல்லவில்லை. சிலர் அங்கு சென்றனர். அவர்களில் குறைந்தது ஒருவர் சிங்கப்பூரர். "ஆனால் இப்போது நூற்றுக் கணக்கானோர் ஐஎஸ் அமைப்பில் சேர மத்தியக் கிழக்குக்குச் செல் கின்றனர். அவர்களில் இளையர் உட்பட சுய தீவிரவாதப் மனப் போக்குடைய சுமார் 12 பேர் சிங் கப்பூரிலிருந்து செல்ல முயற்சி செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் வா‌ஷிங்டனில் அணுவாயுத பாதுகாப்பு உச்சநிலை மாநாடு தொடர்பான இரவு விருந்துக்கு முன் பிரதமர் லீ சியன் லூங்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கை குலுக்கிக் கொண்டனர். படம்: அமெரிக்க வெள்ளை மாளிகை

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!