மதரஸா மாணவிகள் மூவர் தாக்கப்பட்ட சம்பவம்: அமைச்சர்கள் கண்டனம்

மதரஸா மாணவிகள் மூவர் நேற்று முன்தினம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்துரைத்த முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான யாக்கூப் இப்ராகிம் இது முற்றிலும் ஏற் றுக்கொள்ள முடியாத செயல் என்று கண்டனம் தெரிவித்து உள்ளார். "மாணவிகள் தாக்கப்பட்ட சம் பவம் அறிந்து அதிர்ச்சியுற்றேன். மற்றவரை, குறிப்பாக அப்பாவி மக்களைத் தாக்கும் எந்த ஒரு செயலையும் நாம் சகித்துக்கொள்ள முடியாது. அச்செயலைப் புரிந்தவன் சட்டத்துக்கு முன் கொண்டு வரப் பட வேண்டும்.

"போலிஸ் விசாரணைக்கு உதவி வரும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) பாதிக்கப் பட்ட மாணவிகளின் குடும்பத்தா ருக்கு உதவ, மாணவிகள் படிக் கும் அல்=மாரிஃப் அல்=இஸ்லா மியா மதரஸாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. "நாம் அமைதியாக இருக்க வேண்டும். இச்சம்பவம் நமது ஒற் றுமையைப் பிரித்துவிடாமல் பார்த் துக்கொள்ள வேண்டும். இந்த அசம்பாவிதச் சம்பவத்திலிருந்து மாணவிகள் மீண்டு வர இறை வனைப் பிரார்த்திப்போம்," என்று தொடர்பு, தகவல் அமைச்சருமான டாக்டர் யாக்கூப் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கிடையே, மாணவிகள் மூவரைத் தாக்கியவன் விரைவில் சட்டத்துக்கு முன் கொண்டு வரப் படுவான் என்று வெளியுறவு, சட்ட அமைச்சர் கா. சண்முகம் சூளு ரைத்திருக்கிறார்.

"தாக்குதலின் காரணத்தை இப்போதைக்குச் சொல்லமுடியாது. இருப்பினும், இச்சம்பவத்தின் முழு விவரத்தை அறிந்து தாக்கியவன் பிடிக்கப்பட்டு நீதி நிலை நாட்டப் படும்," என்று அமைச்சர் சண் முகம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று முன்தினம் தெரிவித்தார். ஃபேஸ்புக்கில் கருத்துரைத்த உள்துறை அமைச்சின் நாடாளுமன் றச் செயலாளர் அம்ரின் அமின், "இது ஒரு கடுமையான செயல். தாக்குதலுக்குள்ளான மாணவிகளுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சம் குறித்து கவலையடைகிறேன்.

இதன் தொடர்பில் எவ்வித முடிவுக்கும் வராமல் இருப்பது நல்லது. போலிஸ் தனது புலனாய்வை மேற்கொள்ள வாய்ப்பளிக்க வேண் டும்," என்று தெரிவித்தார். கேலாங்கில் உள்ள அந்த மதரஸா மாணவிகளை பாய லேபார் எம்ஆர்டி நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 7.20 மணிக்கு நடுத்தர வயதுடைய ஆடவன் ஒருவன் தாக்கினான். ஒரு மாணவியின் இடது தொடை யில் உதை விட்ட அவன், மற்ற இரு மாணவிகளைக் கடின பொருள் இருந்த பிளாஸ்டிக் பையால் அடித்தான். அதில் ஒரு மாணவியின் கண்ணில் அடி விழுந்தது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலிசை அழைக்கலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!