இன்னும் அதிகமான வெளிப்புறக் கல்வி வாய்ப்புகள்

அதிக உடல் வலிமையை வெளிப் படுத்தும், தாக்குப்பிடிக்கக்கூடிய நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் புதிய பெருந்திட்டத் தின் அடிப்படையில், இங்குள்ள மாணவர்கள் வெளிப்புறக் கல்வி யைப் பெறுவதற்கு அதிக வாய்ப்பு கள் ஏற்படுத்தித் தரப்படும். தேசிய வெளிப்புற அருஞ்செயல் கல்விப் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்து மாணவர் களும் தங்கள் பள்ளி ஆண்டு களில் மூன்று வெளிப்புற முகாம் களில் பங்கேற்க வேண்டும் என்று தற்காலிகக் கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங் நேற்று மன்றத்தில் கூறினார்.

"மேல் தொடக்கநிலை, உயர் நிலை எனத் தற்போது மாணவர்கள் குறைந்தது இரண்டு முகாம்களில் பங்கேற்கின்றனர். அங்கு உணவு தயாரித்தல், தற்காலிகக் கூடாரங் களை உருவாக்குதல், வெளிப் புறத்தில் அபாயங்களைக் கண் காணித்தல் போன்றவை மாணவர் களுக்குக் கற்றுக் கொடுக்கப் படும்," என்று அமைச்சர் இங் விவரித்தார். விரைவில், மற்றொரு முகாம் அறிமுகமாகும். அது உபின் தீவு, கோனி தீவு ஆகியவற்றில் உள்ள 'அவுட்வர்ட் பவுண்ட்' சிங்கப்பூர் (ஓபிஎஸ்) சாகசப் பள்ளியில் இடம்பெறும் ஐந்து நாள் முகாமாக இருக்கும். அது உயர்நிலை மூன் றில் பயிலும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!