ஜூலை 30- தேசிய புத்தக வாசிப்பு நாள்

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைப் பேணி வளர்க்கும் வகையில் முதலாவது தேசிய புத்தகம் வாசிப்பு நாள் ஜூலை 30ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை பார்ப்போரின் அலு வலகத்திற்குச் சிறப்பான புத்தகங்களைக் கொண்டுசெல்வது முதல் எம்ஆர்டி ரயில் ஒன்றை நடமாடும் டிஜிட்டல் நூலகமாக ஆக்குவது வரை பல்வேறு திட்டங்களுக்கும் ஏற்பாடு செய்து அதன் மூலம் வாசகர்களை எட்ட தேசிய நூலக வாரியம் திட்டமிட்டு இருக்கிறது. புத்தகம் படிப்பதை ஊக்க மூட்டுவதற்காக இந்த ஆண்டில் நூலக வாரியம் தேசிய புத்தகம் வாசிப்பு இயக்கத்தைத் தொடங்குகிறது.

அதையொட்டி சிங்கப்பூரின் முதலாவது தேசிய புத்தக வாசிப்பு நாள் ஜூலை 30ம் தேதி கடைப் பிடிக்கப்படும். சிங்கப்பூரில் புத்தகம் வாசிப் பதை எப்படி மேம்படுத்தலாம் என் பதைச் சிறப்பாக புரிந்துகொள் வதற்காக நூலக வாரியம் நாடளா விய ஆய்வு ஒன்றை நடத்த இருக் கிறது. சிங்கப்பூரில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவருவ தாக ஆய்வு முடிவுகள் காட்டுகின் றன. இந்தச் சூழலில் அதிகம் பேரை நூல் வாசிக்க வைக்கும் முயற்சிகளை வாரியம் மேற் கொள்கிறது.

பீஷான் நூலகத்தில் மக்கள் புத்தகம் படிக்கிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!