‘பாரம்பரியம் தலைமுறை தாண்டி தொடர வேண்டும்’

முஹம்மது ஃபைரோஸ்

நாம் தொடர்ந்து கட்டிக்காத்து வரும் நமது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் பொறுப்பை உறுதியுடன் மேற்கொள்ள ஆவன செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை கேம்பல் லேனில் அமைக்கப்பட்டிருந்த பெரிய கூடா ரத்தில் நடைபெற்ற சித்திரை கலை இரவு 2016 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட செம்பவாங் குழுத் தொகுதி நாடா ளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் மேற்கண்ட வேண்டுகோளை முன் வைத்துப் பேசினார். "லிஷா எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் வியாபாரத்தை மட்டும் பார்க்காமல் மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றிலும் அக்கரை காட்டு வது பாராட்டுக்குரியது. "இன்று இந்தத் திறந்தவெளி அரங்கில் நடைபெறும் சித்திரை விழாவைக் காண பலர் திரண்டிருப் பது உற்சாகமளிக்கிறது," என்றார் திரு விக்ரம்.

"சென்ற ஆண்டு சித்திரை விழாவில் திருவள்ளுவப் பெருந்த கையின் திருக்குறளைப் பதாகை கள் வழியாக மக்கள் மத்தியில் லிஷா பிரபலப்படுத்தியது. அதற்கு முத்திய ஆண்டில் அது வையா ரின் ஆத்திசூடியைப் பதாகை களில் இடம்பெறச் செய்திருந்தது. "இந்த ஆண்டும் வையா ருக்கே முன்னுரிமை கொடுக்கப்பட் டுள்ளது. அவர் இயற்றிய கொன்றை வேந்தன் நூலில் இருந்து சில முக்கியமான கருத் துகள் விளம்பரப் பதாகைகளில் இடம்பெற்றுள்ளன. இது மாணவர் களுக்கு மிகவும் பயன்தரும் ஒரு செயலாகும்," என்று திரு விக்ரம் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய லிஷாவின் தலைவர் திரு ராஜ் குமார் சந்திரா, தமிழ்மொழி விழா வின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் உள்ளரங்கில் நடைபெறும் வேளை யில் இந்நிகழ்ச்சி வெளிப்புறத்தில் நடைபெறுவதைச் சுட்டினார். "சித்திரைத் திருவிழா ஆண்டு தோறும் பெரிய அளவில் நடத்தப் பட்டு வருகிறது. இந்த ஆண்டு அனைவரும் எளிதாகக் காணும் பொருட்டு இந்திய மரபுடைமை நிலையத்துக்கு வெளியே அரங்கை அமைத்துள்ளோம்," என்று திரு ராஜ்குமார் மேலும் கூறினார்.

செய்தியாளர்களிடம் பின்னர் பேசிய திரு விக்ரம், "இதுபோன்ற நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தப் படும் மொழியும் பாரம்பரியமும் அடுத்த தலைமுறையினருக்குப் பெரிதும் உதவும் என்பதால் இந்த முயற்சி வரும் ஆண்டுகளிலும் தொடர வேண்டும்," என்பதை வலியுறுத்தியதோடு, "இன்றைய தலைமுறையினரும் தமிழ்மொழி யின் வளர்ச்சிக்குப் பங்காற்ற ஆர்வம் கொள்ள வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார். நேற்றைய நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் சிறப்புகளை எடுத்துக் கூறும் பாடல்கள் தேர்வு செய்யப்பட் டிருந்தன. ஒவ்வொரு பாடலுக்கு முன்னதாகவும் அறிவிப்பாளர் ஸ்ரீதர் அது பற்றி சிறு விளக்கம் அளித்தார்.

கேம்பல் லேனில் நேற்று நடைபெற்ற சித்திரை விழாவில் இடம்பெற்ற இந்த விறுவிறுப்பான நடனம் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது. படம்: ஜி. சுகநிதிசெல்வன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!