புக்கிட் பாத்தோக்கில் உணவு விநியோகத் திட்டம்

புக்கிட் பாத்தோக் தொகுதியில் வசிப்போரில் சுமார் 360 குறைந்த வருமான குடும்பங்கள் நேற்று நடைபெற்ற கேளிக்கை விழாவில் தங்களுக்கு வேண்டிய மளிகைப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து பெற்றுக்கொண்டன. இந்த நிகழ்ச்சிக்கு புக்கிட் பாத்தோக் மக்கள் செயல் கட்சி கிளையின் தலைவரும் புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தல் வேட்பாளருமான திரு முரளிதரன் பிள்ளையும் புக்கிட் பாத்தோக் வர்த்தகர்கள் சங்கத்தினரும் ஏற்பாடு செய்திருந்தனர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 30 புள்ளிகள் கொடுக்கப்படும். அதை கொண்டு மளிகைப் பொருட்களை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம். முடி திருத்துதல், வேலை தேடுதல் போன்றவற்றிலும் குறைந்த வருமான குடும்பங் களுக்கு உதவி வழங்கப்படும். வாடகை வீடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த மளிகைப் பொருள் விநியோகத் திட்டத்தின் யோசனை பிறந்தது என்று திரு முரளி விளக்கினார்.

புக்கிட் பாத்தோக் இடைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு முரளிதரன் பிள்ளை, குடியிருப்பாளர் ஒருவரின் பிள்ளையுடன் விளையாடுகிறார். படம்: எர்வினா முஹம்மது ஜமில்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!