மேல்முறையீடு நிராகரிப்பு

சட்டப்படி வயது வராத ஒரு பெண்ணுடன் பாலியல் உறவுக்கு ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி வெளி நாட்டுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்த குற்றச்சாட்டுகளின் பேரில் சிங்கப்பூரில் முதன் முதலாக குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் சான் சுன் ஹோங். அவர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்குமாறு மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நேற்றுத் தள்ளுபடி செய்துவிட்டது.

சிங்கப்பூர் ஆயுதப்படையின் முன்னாள் கேப்டனான சான் இப்போது நான்கு ஆண்டுகள், எட்டு மாதச் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். அந்த 32 வயது ஆடவர் மீது மொத்தம் 145 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றில் 12 குற்றச் சாட்டுகளின் பேரில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். நான்கு குற்றச்சாட்டுகளில் ஒவ்வொன்றின் பேரிலும் விதிக்கப்பட்ட தண்டனைகள் தொடர்பில் அவர் மேல்முறையீடு செய்து இருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!