செம்பவாங் வெந்நீர் ஊற்று இடத்தை திருப்பிக் கொடுக்க தற்காப்பு அமைச்சு ஆயத்தம்

செம்பவாங் வெந்நீர் ஊற்றைக் கவர்ச்சிகரமான ஒரு தேசிய பூங்காவாக ஆக்கும் யோசனை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த ஊற்று அமைந்துள்ள நிலத்தை சிங்கப் பூர் நில ஆணையத்திடம் திருப் பிக்கொடுக்க தான் ஆயத்தமாக இருப்பதாக தற்காப்பு அமைச்சு அறிவித்து இருக்கிறது. மூத்த தற்காப்பு துணை அமைச்சர் ஓங் யி குங், நேற்று மக்கள் கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது இதனைத் தெரிவித்தார். அந்த நிலத்தைத் திருப்பி கொடுப்பதால் தற்காப்பு அமைச்சுக்குப் பாதிப்பு எதுவும் இருக்காது என்றும் சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் செயல்முறைத் தேவைகளுக்கும் பாதிப்புகள் இராது என்றும் அமைச்சர் குறிப் பிட்டார். சிங்கப்பூரில் அரிதாக இருக்கக்கூடிய செம்பவாங் ஊற்றை ஒரு பூங்காவாக மாற்ற லாம் என்று நாடாளுமன்ற உறுப் பினர் லிம் வீ கியாக் நாடாளு மன்றத்தில் ஏப்ரல் 12 ஆம் தேதி யோசனை தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!