உலகில் பாதிக்கும் மேலான நிறுவனங்கள் ஆட்குறைப்பு

உலகம் முழுவதும் பாதிக்கும் அதிகமான நிறுவனங்கள் வேலைகளைக் குறைக்கின்றன. அல்லது முடக்குகின்றன என்பது ஓர் ஆய்வில் தெரியவந்து இருக்கிறது. தொழில் வாய்ப்புகள் அவ்வளவு நன்றாக இருக்காது என்றே உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் கருதுகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளைப் பார்க்கையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டைப் போல் மிகக் குறைந்த அளவுக்கு அவநம் பிக்கை இருந்தது இல்லை. கணக்குத் தணிக்கை நிறுவனங் கள் இவ்வாறு தெரிவிக்கின்றன.

கணக்குத் தணிக்கைச் சான்றிதழ் பெற்ற கணக்காளர்கள் சங்கம், நிர்வாக கணக்காளர்கள் கழகம் ஆகிய இரண்டு அமைப்பு களும் உலகப் பொருளியல் நிலவர ஆய்வு என்ற ஓர் ஆய்வை நடத்தின. ஆய்வில் கலந்து கொண்ட நிறுவனங்களில் பாதிக் கும் அதிக நிறுவனங்கள் தாங்கள் ஊழியர்களைக் குறைப்ப தாக அல்லது ஊழியர் அணியை முடக்கி வைப்பதாகத் தெரிவித் துள்ளன. 14% நிறுவனங்கள் மட்டுமே தாங்கள் ஊழியர்களைச் சேர்ப்பதாக தெரிவித்தன. இந்த ஆய்வு, கணக்குத் தணிக்கையா ளர்கள் சேர்ந்து நடத்திய ஆகப் பெரிய பொருளியல் ஆய்வு என்று இந்த இரண்டு அமைப் புகளும் தெரிவித்தன.

ஆய்வில் கலந்துகொண்ட வர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் சிறிய, நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். மற்றவர் கள் 250க்கும் அதிக ஊழியர் களைக் கொண்ட பெரிய நிறுவ னங்களுக்கு கணக்குத் தணிக் கையாளர்களாக இருப்பவர்கள். மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த நிலவரத்தைப் போல் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நிலவரம் இல்லை என்றும் தொழில்துறை நம்பிக்கை குறைந்துவிட்டது என்றும் ஆய் வில் கலந்துகொண்ட கிட்டத் தட்ட பாதி நிறுவனங்கள் கூறின.

நம்பிக்கையுடன் இருந்த நிறு வனங்கள் கால்வாசிக்கும் குறைவு. ஒட்டுமொத்த நிறுவனங்களில் 42% முதலீடுகளைக் குறைக்கின்றன. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வருமானம் குறைந்ததாகத் தெரிவித்த நிறுவனங்களின் எண்ணிக்கை 48%க்கு கூடியது. இந்த அளவு 2015 கடைசி காலாண்டில் 46% ஆக இருந் தது. வட அமெரிக்காவைத் தவிர எல்லா வட்டாரங்களிலும் அதிக நிறுவனங்கள் மூலதனச் செலவினங்களைக் குறைத்தன. சென்ற காலாண்டில் உலகப் பொருளியலில் ஏற்பட்ட மாற்றங் களின் பலனாகத் தருவிப்பு ஆணைகள் அதிகமானதாகக் தெரிவித்த நிறுவனங்கள் 12% மட்டுமே என்று ஆய்வு குறிப்பிட் டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!