தர்மன்: நாடளாவிய பாதுகாப்புப் பெட்டக முறை அமலாகும்

சிங்கப்பூர் முழுவதும் பாதுகாப்புப் பெட்டகங்கள் முறை ஒன்றை அமலாக்கும் அரசாங்கத்தின் புதிய நடவடிக்கை இடம்பெற இருக்கிறது என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் அறிவித்து இருக்கிறார். பொதுமக்கள் தாங்கள் இணையம் வழி வாங்குகின்ற பொருட்களைப் அந்தப் பெட்டகங்கள் மூலம் (பார்சல்களை) பெறலாம் என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம் பொருட்கள் வந்து சேர்வது எளிதாக இருக்கும் என்றார் அவர். பொருட்களை வீட்டுக்கு வீடு கொண்டு கொடுக்கும் முறை சிரமமானது. அதற்குச் செலவும் அதிகம் ஆகி றது. அந்தச் செலவைப் பயனீட்டா ளர்கள்தான் ஏற்கவேண்டிய நிலையும் உள்ளது என்பதை திரு தர்மன் சுட்டினார்.

சில நிறுவனங்கள் பெட்டக முறையைக் கைக்கொள்ளத் தொடங்கி இருக்கின்றன. இருந்தாலும் ஒவ்வொரு நிறுவனமும் சொந்தமாக இத்தகைய பெட்டகங்களை அமைத்து தொழில் நடத்தினால் அதற்குச் செலவு அதிகமாகும் என்பதை துணைப் பிரதமர் சுட்டிக்காட்டி னார். ஆகையால் குடியிருப்புப் பேட்டைகளில் அல்லது குடியிருப்புப் பேட்டைகளுக்கருகே வசதியாக இத்தகைய பொதுப் பெட்டகங்களை அமைக்க வேண் டிய தேவை ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!