திரு லீ: டாக்டர் சீ சொல்வது ஒன்று, செய்வது ஒன்று

வில்சன் சைலஸ்

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் (சிஜக) தலைவர் டாக்டர் சீ சூன் ஜுவான் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்றும் அவர் செய்த தவற்றுக்கு வருத்தப் படவில்லை என்றும் சாடியுள்ளார் பிரதமர் திரு லீ சியன் லூங். எதிர்வரும் இடைத்தேர்தலில் திரு முரளியுடன் சேர்ந்து ஆதரவாளர்களைத் திரட்ட நேற்று புக்கிட் பாத்தோக் தனித் தொகுதிக்கு வருகை புரிந்த மக்கள் செயல் கட்சி தலைமைச் செயலாளருமான திரு லீ செய்தி யாளர்களிடம் இவ்வாறு கூறினார். சிஜகவின் பிரசாரத்தைக் கடந்த வெள்ளிக்கிழமை கேட் டதாக சொன்ன அவர், புக்கிட் பாத்தோக் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு டேவிட் ஓங்கை அக்கட்சித் தொண்டர்கள் மேடையில் சாடியதைக் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து இறுதியாக பேசிய டாக்டர் சீ, தவறு செய்த ஒருவரை அவ்வாறு சாடுவது சரியல்ல என்றும் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தரப்பட வேண்டும் என்றும் கூறினார். "தவறான கருத்துகளைக் கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதித்துவிட்டு இறுதியாக எதுவும் நடக்காதது போல டாக்டர் சீ உரையாற்றியது போலியாக உள்ளது," என்றார் திரு லீ.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!