‘பாரம்பரியத்தை அழியவிடோம்’

சுதாஸகி ராமன்

கபடி, 'கோ கோ', சாக்குப் பை ஓட்டம், 'கிட்டிப் புல்', நொண்டிக் கால் ஆட்டம் என்று நம் முன் னோர் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகள் பலவற்றை நேற்று நடைபெற்ற இந்திய பாரம் பரிய விளையாட்டு விழாவில் பலர் விளையாடி மகிழ்ந்தனர். இந்திய புத்தாண்டுகளை முன்னிட்டு மெய் சின் ரோட்டில் உள்ள குளோபல் இந்தியர் அனைத்துலகப் பள்ளியில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இவ்வாண்டு 1,500க்கு மேற்பட் டோர் வயது வரம்பின்றி கலந்து கொண்டு அவ்விளையாட்டுகளை விளையாடினர். சிறுவர்களால் கிராமங்களில் விளையாடப்பட்ட இந்த பாரம்பரிய விளையாட்டுகளை மறையாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறை சிறுவர்களுக்கும் இளையர்களுக் கும் அவற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த விளையாட்டு விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

"சிறுவர்களும் இளையர்களும் தங்கள் குடும்பங்களுடன் இவ் விழாவில் ஆர்வத்துடன் பங்கேற் றது மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்று. பெரும்பாலான நேரத்தை இணையத்தில் போக்கும் சிறுவர் களுக்கும் இளையர்களுக்கும் இந்நிகழ்ச்சி புது அனுபவமாக இருந்திருக்கும் என நம்புகிறேன்," என்றார் ஏற்பாட்டு குழு உறுப்பினர் திரு ராஜா ராமசந்திரன், 46. சிறுவர்கள், இளையர்கள், பெரியோர் என்று மூன்று பிரிவு களில் போட்டிகளாக விளையாட்டு கள் நடத்தப்பட்டன. வெற்றி வாகை சூடிய குழுக் களுக்கும் தனிநபர்களுக்கும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. "இந்த விளையாட்டுகளைப் பற்றி அதிகமாக அறியாததால் முதல்முறையாக அவற்றை விளை யாட ஆவலோடு இருந்தேன். "காலங்காலமாக விளையாடப் படும் இந்தப் பாரம்பரிய விளை யாட்டுகளை அடுத்த தலைமுறை யினர் அறிந்துகொள்ளவில்லை என்றால் அது வருத்தம் தரக்கூடிய ஒன்றாகும்," என்றார் விழாவில் பங்கேற்ற ஜனனி ராஜா, 13. முதன்முறையாக தொழிலாளர் தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில், பல வெளிநாட்டு ஊழியர்களும் கலந்துகொண்டு விடுமுறையைக் கழித்தனர்.

நேற்று நடைபெற்ற இந்திய பாரம்பரிய விளையாட்டுகள் விழாவில், 'கோ கோ' என்று அழைக்கப்படும் இந்த விளையாட்டில் வரிசையாக பங்கேற்பாளர்கள் அமர்ந்திருக்கிறார்கள். ஓடிப் பிடித்து விளையாடும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. படம்: விவேகானந்தா சேவா சங்கம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!