டாக்டர் சீ: நாங்கள் இனவாதப் போக்குடையவர்கள் அல்லர்

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியினர் ஒருபோதும் இனவாதப் போக்கு டையவர்கள் அல்லர் என்று அக்கட்சியின் தலைமைச் செய லாளரும் புக்கிட் பாத்தோக் தனித்தொகுதியின் இடைத் தேர்தல் வேட்பாளருமான டாக்டர் சீ சூன் ஜுவான் கூறியுள்ளார். நேற்று புக்கிட் கோம்பாக் விளையாட்டரங்கில் நடைபெற்ற அக்கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் மக்கள் செயல் கட்சியை சாடினார். "சில தினங்களுக்கு முன் அமைச்சர் கிரேஸ் ஃபூ எங்களை இனவாதப் போக்குடையவர்கள் என்று சாடினார். நாங்கள் எப்போதாவது இனவாதத்தைத் தூண்டும் வகை யில் பேசியிருக்கிறோமோ என் பதை அவர் ஆதாரத்துடன் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். இப்படி இருக்கையில் அமைச்சர் கிரேஸ் எவ்வாறு நாங்கள் இன வாதப் போக்குடையவர்கள் என்று கூற முடியும் என்று வினவினார்.

மேலும் பேசுகையில் அண்மையில் பிரதமர் லீக்கும் அவரது சகோதரிக்கும் இடையே பகிரங்கமாக மனக்கசப்பு ஏற்பட் டதை அனைவரும் அறிவீர்கள். எங்கள் பிரசாரத்தில் என்றைக் காவது நாங்கள் அதை ஒட்டிப் பேசியுள்ளோமா? அப்படியிருக் கையில் பிரதமர் லீ, தொகுதியின் பிரச்சினைகளை விடுத்து எனது குணநலன்களைப் பற்றி எவ்வாறு கேள்வி எழுப்ப முடியும் என்றும் சாடினார். நேற்றைய பிரசாரக் கூட் டத்தில் பேசிய சிங்கப்பூர் ஜன நாயகக் கட்சியின் திரு சதாசிவம் வீரைய்யா, "டாக்டர் சீ குணத் திலும் பண்பிலும் ஒரு சிறந்த மனிதர். அவரது மதிப்பைக் குலைக்க மக்கள் செயல் கட்சி முயன்று வருகிறது. காரணம், இது தனித் தொகுதி என்பதால் அவர்கள் டாக்டர் சீயைக் கண்டு அஞ்சுகிறார்கள். அடுத்த நான்கு நாட்களுக்கு ஒட்டுமொத்த அமைச்சரவையே திரு முரளிக்கு உங்கள் ஆதரவைத் திரட்ட இங்கு களம் இறங்கி விடுவார்கள் போலிருக்கிறது," என்று பேசினார்.

புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டாக்டர் சீ சூன் ஜுவான் (இடமிருந்து 3வது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!