மும்முறை பாலியல் பலாத்காரம்; வழக்கு விசாரணை தொடங்கியது

இருபது நிமிடங்களில் மூன்று இடங்களில் ஒரே பெண்ணிடம் மூன்று முறை பாலியல் பலாத் காரத்தில் ஈடுபட்டதாகக் கூறப் படும் 26 வயது நபர் மீதான வழக்கு விசாரணை நேற்றுத் தொடங்கியது. 2013 சீனப் புத்தாண்டின் விடி யற்காலைப் பொழுதில் ரிவர் வேலி குளோஸை நோக்கிச் செல்லும் மார்ட்டின் ரோட்டில் நடைபெற்ற சம்பவத்தில் 24 வயது பெண் பாலியல் பலாத்காரத் திற்கு ஆளானார். இந்த வழக்கின் முதல் நாளான நேற்று தற்போது 30 வயதாகும் சிங்கப்பூரரான லிம் சூன் பெங் மீது பாலியல் பலாத் காரம் உட்பட ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளாத திரு லிம் ஏழு குற்றச்சாட்டுகளிலும் வழக்கு விசாரணை கோரியிருக்கிறார்.