சிறார்களிடம் அதிகரிக்கும் கை, கால், வாய்ப் புண் நோய்

சிறார்களிடையே கை, கால், வாய்ப் புண் நோய் அதிகரித்து வருகிறது. இதைத் தெரிவித்த சுகாதார அமைச்சின் இணையத்தள செய்தி, கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப் பிறகு ஏப்ரல் 17லிருந்து 23ஆம் தேதி வரையிலான வாரத்தில்தான் ஆக அதிகமாக 1,052 பேருக்கு கை, கால், வாய்ப் புண் நோய் ஏற் பட்டதாகக் குறிப்பிட்டது. இந்த எண்ணிக்கை இவ் வாண்டு பிப்ரவரி மாதம் முதல் ஏறத் தொடங்கியதாகவும் அமைச்சு கூறியது.

முதலில் பிப்ரவரி 7 முதல் 13வரை இந்த எண்ணிக்கை 756 ஆக இருந்தது என்றும் பின்னர் இரு வாரங்கள் கழித்து அது 900ஐ தொட்டதாகவும் கூறப்படு கிறது. இவ்வாண்டு ஏப்ரல் 23ஆம் தேதிவரை மொத்தம் 12,166 பேருக்கு இந்த நோய் ஏற்பட்டிருப் பதாகவும் ஒப்புநோக்க சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 8,835 என்று அமைச்சின் இணையத் தளம் தெளிவுபடுத்தியது. இது பற்றிக் கருத்துக்கூறிய மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவனையின் தொற்றுநோய் பிரிவு நிபுணர் லியோங் ஹோ நாம், “இதே நிலைமை அடுத்த இரண்டு, மூன்று வாரங்களுக்கு தொடர்ந்தால் இது ஒரு பரவலான தொற்று நோயாக மாறிவிடும்.” என்றார்.