138 ஆசிரியர்களுக்கு பயிற்சி மேம்பாடு

பாலர்பள்ளி ஆசி­ரி­யர்­களின் தொழில் முன்­னேற்­றத்­துக்­கா­க­வும் அவர்கள் பெரிய பொறுப்­பு­களை வகிக்­க­வும் வழி செய்­யக்­கூ­டிய விதத்­தில் கடந்த ஆண்டு அறி­ மு­கம் கண்ட புதிய திட்­டத்­தில் பங்­கேற்­க­வி­ருக்­கும் முதல் குழுவைச் சேர்ந்த 138 ஆசி­ரி­யர்­கள் நேற்று நிய­ம­னம் பெற்­ற­னர். இந்த நிபு­ணத்­துவ மேம்பாட்­டுத் திட்­டத்­தில் பங்­கேற்­க­ இ­ருக்­கும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் இந்தத் திட்டத்தில் ஈடுபடும் மூன்றாண்டுகளில் $12,000 வரை ரொக்கம் வழங்­கு­வற்­காக ஆரம்ப­கால குழந்தைப்­ ப­ருவ மேம்பாட்டு வாரியம் $1.7 மில்­லி­யனை ஒதுக்­கி­யுள்­ளது.

பாலர்பள்ளி ஆசி­ரி­யர்­கள் மூன்றாண்­டு­களில் 180 மணி நேரத்தை பாடங்கள், திட்­டப்­ப­ணி­கள் போன்ற­வற்றை மேற்­கொள்ள அனு­ம­திப்­ப­தோடு வேலை­யி­டத்­ தில் அதிக பொறுப்­பு­களை ஏற்க அவர்­களைத் தயார்ப்­படுத்­த­வும் ‘ஸ்கில்ஸ்­ஃ­பி­யூச்­சர்’ இயக்­கத்­தின் அடி­யொற்றி இருக்­கும் இந்தத் திட்டம் வகை செய்யும்.2016-05-05 06:00:50 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூரில் மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்திய முதல் சில்லறை விற்பனை எரிபொருள் நிறுவனம் எனும் பெருமையை ‘ஷெல்’ நிறுவனம் பெற்றுள்ளது. படம்: ஷெல்

20 Aug 2019

வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்யும் வசதி: ‘ஷெல்’ அறிமுகம்

இவ்வாண்டில் சிங்கப்பூர் பெரும் முதலீடுகளை ஈர்த்துள்ளது. பின்லாந்தின் எண்ணெய் நிறுவனமான நெஸ்ட் தனது எரிசக்தி புதுப்பிப்பு ஆலை விரிவாக்கத்தில் $2 பில்லியன் செய்யவிருக்கும் முதலீடும் அவற்றுள் அடங்கும். சிங்கப்பூர் துறைமுக கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Aug 2019

சிங்கப்பூர் பொருளியல் இன்னும் மோசமான கட்டத்தை நெருங்கவில்லை