‘சிறுபான்மையினர் அதிபராக அழுத்தமான செயல்பாடு தேவை’

மக்கள் தேர்ந்து எடுக்கும் அதிபர் தேர்தல் முறையில் சிறுபான்மை யினருக்குப் பிரதிநிதித்துவம் இருப்பதை உறுதிப்படுத்த உத் தேசிக்கப்படும் மாற்றங்களில் ஏதாவது ஒரு வகையில் அழுத்த மான நடவடிக்கை தேவை என்று முன்னாள் அமைச்சர் எஸ் தனபாலன் கருத்து தெரிவித்து உள்ளார். மக்கள் தேர்ந்து எடுக்கும் அதிபர் தேர்தல் முறைக்கு உத் தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில், தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையிலான அரசமைப்புச் சட்ட ஆணையம் நடத்திவரும் கருத்தறிதல் கூட்டங் களில் கடைசிக் கூட்டம் நேற்று உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடந் தது. அதில் திரு தனபாலன் தனது கருத்துகளை -முன்வைத்தார்.

அப்போதைக்கு அப்போது சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்து எடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ் வொரு மூன்றாவது அதிபர் தேர்தலையும் தனியாக வகைப்படுத்த லாம் என்று திரு தனபாலன் யோசனை தெரிவித்தார். இந்த முறையின் கீழ் ஆறு ஆண்டுகளுக்குப் பதவி வகிக்கும் அதிபரைத் தேர்ந்து எடுக்க இரண்டு தேர்தல்கள் இருக்கும். எட்டு ஆண்டுகள் பதவிக் காலத்தைக்கொண்ட அதிபர் தேர்தல் ஒன்றும் இருக்கும் என்றார் அவர். இந்த எட்டு ஆண்டு கால தேர்தலைப் பொறுத்தவரையில், இரண்டு பேர் ஒரே தரப்பில் போட்டி யிடலாம். அவர்களில் குறைந்தபட்சம் ஒருவர் சிறுபான்மையினராக இருக்கலாம். இருவரில் ஒவ்வொரு வரும் நான்கு ஆண்டுகளுக்குப் பதவி வகிக்கலாம் என்று திரு தனபாலன் தெரிவித்தார்.

சிறுபான்மை வேட்பாளரை நாடாளுமன்றம் நியமிக்க வேண் டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார். வரம்புக்குட்பட்ட சூழலில் இத்தகைய வேட்பாளர்களுக் கான நிபந்தனைகளைக் குறைக்க லாம் என்றார் திரு தனபாலன். "இப்படிப்பட்ட ஓர் ஏற்பாடு அழுத்தமான செயல்பாடு என்ற குறைகூறலுக்கு உட்படாதா,"? என்று தலைமை நீதிபதி கேட்டார். அதற்குப் பதில் அளித்த திரு தனபாலன், "இந்த அணுகுமுறையில் அழுத்தமாகச் செயல்படும் அம்சம் இருக்கவே செய்கிறது. அதிபர் தேர்தலில் சிறுபான்மையினரைப் பிரதிநிதிக்கக்கூடிய அல்லது சிறுபான்மையினர் அதிப ராக ஆகக்கூடிய சிறப்பான சில வழிகளை நாம் நாடுகிறோம். "இதைப் பார்க்கையில் சிறப்பான ஓர் ஏற்பாடு நமக்குத் தேவை என்பதை நாம் ஏற்கெனவே ஒப்புக் கொண்டுவிட்டோம் என்றே தெரி கிறது," என்றார்.

மக்கள் தேர்ந்து எடுக்கும் அதிபர் தேர்தல் முறையில் மூன்று அம்சங்களை மறுபரிசீலனை செய் வதற்காக பிரதமர் லீ சியன் லூங், கடந்த பிப்ரவரியில் இந்த ஆணை யத்தை அமைத்தார். அதிபர் தேர்தல் வேட்பாளர்களாகத் தகுதி பெறுவதற்கான நிபந்தனைகள், அப்போதைக்கு அப்போது அதிபராகத் தேர்ந்து எடுக்கப்படும் வாய்ப்பைச் சிறுபான் மையினர் பெறுவதற்கான ஏற்பாடு கள், அதிபர் ஆலோசகர்கள் மன்றத்தில் இடம்பெறக்கூடிய உறுப் பினர்கள் அரசாங்கத் துறையிலும் தனியார் துறையிலும் அனுபவம் பெற்று இருப்பதை உறுதிப்படுத்து வதற்கான மாற்றங்கள் ஆகியவை அந்த மூன்று அம்சங்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!