சிங்கப்பூர்- ஆஸ்திரேலியா: அதிக பட்டப்படிப்புக்கு அங்கீகாரம்

சிங்கப்பூர்- ஆஸ்திரேலியா இரு நாடுகளுக்கு இடையில் புதிய உடன்பாடு கையெழுத்தாகி இருக்கிறது. இதன் பலனாக இரு நாடுகளின் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த அதிக பட்டப்படிப்புகள் அங்கீகரிக்கப் படும். இவற்றில் முக்கியமாக ஆஸ்திரேலியாவின் பத்து பல்கலைக்கழகங்கள் அளிக்கும் ஜூரிஸ் டாக்டர் (JD) பட்டங்கள் அடங்கும். இதேபோல் சிங்கப்பூர் பல் கலைக்கழகங்களைச் சேர்ந்த இளநிலை பட்டப்படிப்புகளையும் ஜூரிஸ் டாக்டர் சட்டப் பட்டப் படிப்புகளையும் ஆஸ்திரேலியா அங்கீகரிக்கும்.

இவை ஒருபுறம் இருக்க, ஆஸ்திரேலியாவில் படிக்கும் 100 சிங்கப்பூர் மாணவர் களுக்கு அந்த நாட்டின் முன் னணி நிறுவனங்களில் மேலும் அதிக பயிற்சி வாய்ப்புகளை வழங்கும் வகையில் முன்னோடி பயிற்சி செயல்திட்டம் ஒன்றும் இடம்பெறும். இருநாடுகளும் வெளிநாடு களில் வளாகங்களைக் கொண்ட தங்கள் பல்கலைக் கழகங்களுக்கு இடையே ஒத் துழைப்பை அதிகப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.