அமைச்சர் லிம்: தேர்ச்சி, உறுதி, இதயம் காரணமாக வேலை, நல்ல சம்பளம்

மக்களின் தேர்ச்சி, உறுதி, இதயம் ஆகியவை காரணமாக சிங்கப் பூரில் வேலையின்மை விகிதம் குறைவாக இருக்கிறது என்றும் கட்டிக்காக்கக்கூடிய சம்பளம் நடப்பில் உள்ளது என்றும் மனித வள அமைச்சர் லிம் சுவீ சே தெரிவித்துள்ளார். மாணவர்கள் இதே உணர்வைக் கைக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத் தினார். தெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வேலை, தேர்ச்சி, வேலை நியமனம் ஆகியவற்றை உள்ளடக்கிய உலக அணி ஒன்று இருக்குமானால் சிங்கப்பூர் அதில் முன்னணியில் இருக்கும் என்றார்.

சிங்கப்பூர் தொழிலாளர்கள் ஏற்கெனவே தேர்ச்சி உள்ளவர்கள். அவர்களின் தேர்ச்சிகளை இன் னும் மேம்படுத்த அரசாங்கம் முயலுகிறது என்பதற்கு ‘ஸ்கில்ஸ் ஃபியூச்சர்’ ஓர் எடுத்துக்காட்டு என்று அமைச்சர் கூறினார். அதோடு மட்டுமின்றி, தேர்ச் சிகளை மேம்படுத்திக்கொள்வதை நிறுத்திவிடாதீர் என்று பட்டதாரி களுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஊக்கமூட்டி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். தொழில்துறை உருமாற்றம் வழியாக சிங்கப்பூர் உலகிலேயே மிகவும் போட்டித்திறன்மிக்க பொருளியலாகத் திகழ உறுதி பூண்டுள்ளதைப் போல, மாணவர் கள் தாங்கள் தோல்வி அடைந் தாலும் அது பற்றி கவலைப்படாமல் வெற்றி பெறவேண்டும் என்ற உறுதியுடன் திகழவேண்டும் என் றார் திரு லிம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஹோர்ட்பார்க்’ விளையாட்டுப் பூங்காவில் மண்ணிலும் மரத்திலும் விளையாடி மகிழும்  மை ஃபர்ஸ்ட் ஸ்கூலில் படிக்கும் பாலர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Mar 2019

இயற்கையுடன் இணைந்த விளையாட்டுப் பூங்கா