‘மக்களுக்கு சமர்ப்பணம்’

தமிழவேல்

புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி யைத் தாம் மிகவும் தன்னடக்கத்துடன் ஏற்றுக்கொள்வதாகக் கூறி னார் மக்கள் செயல் கட்சியின் திரு முரளி பிள்ளை. சிங்கப்பூர் ஜனநாயகக் கட் சிக்கும் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட டாக்டர் சீ சூன் ஜுவானுக்கும் நன்றி கூறிய திரு முரளி, அவர்கள் நல்ல முறையில் போட்டியிட்டனர் என்றார். அத னால் புக்கிட் பாத்தோக் தனித் தொகுதிக்கான தமது திட்டங் களைத் தம்மால் மேலும் சிறப்பாக எடுத்துரைக்க முடிந்தது என்றார் அவர். "இந்த வெற்றியை ஈட்டித் தந்த புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர் களுக்கு நன்றி கூறி கொள் கிறேன். இங்கு செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன.

"நாளையே என் பணி தொடங் கும். புக்கிட் பாத்தோக் குடியிருப் பாளர்கள் அனைவருக்கும் நான் சேவையாற்றுவேன்," என்றார் திரு முரளி பிள்ளை. புக்கிட் பாத்தோக் இடைத் தேர்தலில் வெற்றி பெற்று அதன் புதிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றிருக்கும் திரு முரளிதரன் பிள்ளை நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு, செய்தியாளர் கூட்டம் முடிவடைந்தவுடன் தமது தாயார் திருமதி வசந்தி பிள்ளையின் கன்னத்தில் முத்தம் கொடுத்து தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார். அவரது தாயாரோ இதுவே இந்த ஆண்டு தமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெருமை தரும் அன்னையர் தினப் பரிசு என்று கூறினார். படம்: தமிழவேல்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!