பள்ளி, கல்லூரி நேரடி மாணவர் சேர்க்கை

உயர்நிலைப் பள்ளிகளுக்கும் தொடக்கக் கல்லூரிகளுக்குமான நேரடி மாணவர் சேர்க்கை நட வடிக்கை இம்மாதத்தில் தொடங் கும் என கல்வி அமைச்சு நேற்று தெரிவித்தது. இருப்பினும் பலதுறை தொழிற் கல்லூரிக்கான ஆரம்ப மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் புதிய திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடிச் சேர்க்கைத் திட்டத்தின் கீழ் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதில் பள்ளிகளுக்கு நீக்குப்போக்கு வழங்கப்படுகிறது. மாணவர்களின் சொந்தத் தகுதி அடிப்படையிலும் திறன்கள், சாதனைகள், தனிப்பட்ட தராதரம் ஆகியவற்றின் அடிப்படையிலும் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள பள்ளிகள் அனுமதிக்கப் படுகின்றன. 2017ஆம் ஆண்டில் உயர்நிலை 1ல் சேரவிருக்கும் மாணவர்களுக் கான இந்த நடவடிக்கையில் இந்த ஆண்டு 118 பள்ளிகள் இணைந்துள்ளன. அதேபோல 22 தொடக்கக் கல்லூரிகளும் இதில் பங்கெடுத்துள்ளன.

விருப்பமுள்ள மாணவர்கள் தங் களுக்குப் பொருத்தமான பள்ளியின் இணையத்தளத்துக்குச் சென்று விண்ணப்ப காலத்தையும் இதர தகவல்களையும் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என அமைச்சு கூறி யுள்ளது. தகுதி பெறும் மாண வர்கள் தங்களது பிஎஸ்எல்இ அல்லது ‘ஓ’ நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே சம்பந்தப்பட்ட பள்ளி களில் சேர்த்துக்கொள்ளத் தேர்ந் தெடுக்கப்படுவர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள் உயர்நிலை ஒன்றுக்கான வேறெந்த மாணவர் சேர்க்கை நடவடிக்கையிலும் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள். அத் துடன், தேர்வு முடிவுகள் வெளி யான பின்னர் வேறொரு பள்ளியை அவர்கள் தேர்ந்து எடுக்கவும் முடியாது.

பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, நேரடி பல துறைத் தொழிற் கல்லூரி மாணவர் சேர்க்கை நடவடிக்கை இந்த ஆண்டு முதல் ஆரம்ப மாணவர் சேர்க்கை நடவடிக்கை என்று மாற்றப்படும். கூட்டு பலதுறைத் தொழிற்கல்லூரி சிறப்பு மாணவர் சேர்க்கை நட வடிக்கையும் ஆரம்ப மாணவர் சேர்க்கை நடவடிக்கையுடன் இணைக்கப்படும். அந்த நட வடிக்கையில் இங்குள்ள ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகளும் இணைந்துள்ளன.