எலும்பு முறிவு: இரண்டு நாள் விடுப்பு கொடுத்த மருத்துவர் இடைநீக்கம்

கட்டுமான ஊழியர் ஒருவருக்கு கை எலும்பு முறிவு சிகிச்சை அளித்த மருத்துவர், அவருக்கு இரண்டு நாட்கள் மட்டுமே மருத்துவ விடுப்பு வழங்கினார். இதனால் ராஃபிள்ஸ் மருத்துவ மனையில் பணியாற்றிய எலும்பு சிகிச்சை நிபுணர் வோங் ஹிம் சூன் இடைநீக்கம் செய்யப்பட்டார். அந்தக் கட்டுமான ஊழியர் இலகுவான வேலைகளில் ஈடுபட லாம் என்று கூறி இரண்டு நாட்கள் மட்டுமே மருத்துவ விடுப்பு வழங் கியது மருத்துவ தொழிலில் முறை யற்ற செயல்பாடு என்று சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தின் அறிக்கை தெரிவித்தது. “மருத்துவர் வோங்கின் செயல் பாடு தகுதியான, நன்மதிப்புள்ள மருத்துவர் கடைப்பிடிக்கக்கூடிய செயல் அல்ல,” என்றும் அறிக்கை குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்த விபத்தில் ஊழியர் ஒருவருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த ஊழியர் கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி மருத்துவர் வோங்கிடம் அழைத்துச் செல்லப் பட்டார். அந்த ஊழியருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று கூறிய திரு வோங், அவருக்கு அடுத்த நாள் அறுவை சிகிச்சை செய்து அன்றே மருத்துவமனையி லிருந்து விடுவித்தார். ஊழியருக்கு செப்டம்பர் 3, 4 தேதிகளில் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது. செப்டம்பர் 5ஆம் தேதியிலிருந்து அந்த ஊழியர் ஒரு மாத காலத் துக்கு இலகுவான வேலை களை செய்யலாம் என்றும் மருத்து வர் சான்றிதழ் வழங்கியிருந்தார்.