தனியார் வாடகை கார் ஓட்டுநருக்கு புதிய காப்புறுதி

கிராப்­கார், உபர் செய­லி­கள் வழி­யா­கச் செயல்­படும் தனியார் வாடகைக் கார் ஓட்­டு­நர்­களுக்­காக புதிய காப்­பு­று­தித் திட்டம் தொடங்கப்­பட்­டுள்­ளது. புதிய திட்­டத்­தில் வாகனத்தை ஓட்­டு­வதற்கு ஏற்ப பாலிசி தொகையைச் செலுத்தலாம். Pay-As-You-Grab என்பது இந்த வர்த்­தக வாகன காப்­பு­றுதி பாலி­சிக்­குப் பெயர். இந்தத் தொழில்­துறை­யில் அதிக பகுதி நேர ஊழி­யர்­களைச் சேர்க்க ஊக்­மூட்­டு­வது இலக்கு. ஆண்­டுக்கு $3,000 என இருக்­கும் வர்த்­த­கக் காப்­பு­று­திக் கட்­ட­ணச் சுமையைக் குறைக்க இந்தப் புதிய திட்டம் உதவும். பய­ணி­களை ஏற்றிச் செல்லும் வர்த்­தக ரீதி­யி­லான வாகன காப்­பு­று­திக் கட்­ட­ணம், தனியார் பய­னீட்­டுக்­கான வழக்­க­மான வாகனப் பாலி­சியை­விட சுமார் 30 முதல் 50% வரை அதிகம். புதிய காப்­பு­று­தித் திட்­டத்தை கிராப் (Grab) நிறு­வ­ன­மும் ஏஎக்ஸ்ஏ இன்­சூ­ரன்ஸ் சிங்கப்­பூர் (AXA In­s­u­r­a­n­ce Si­n­g­ap­o­re) நிறுவனமும் வடி­வமைத்­துள்­ளன. இதன்மூலம் வாகன ஓட்­டி­கள் தங்களுடைய வர்த்­தக வாகன காப்­பு­றுதி சந்தா கட்­ட­ணத் தொகையில் 30% வரை சேமிக்கலாம். இது அவர்­கள் கட்­ட­ணத் தைப் பெற்­றுக்­கொண்டு பயணிகளை ஏற்றிச்செல்லும் தொலை வைப் பொறுத்து இருக்­கும் என்று இரு நிறு­வ­னங்களும் கூறின.

"வழக்­க­மான காப்­பு­று­திக் கட்­ட­ணத்தை­விட வர்த்­த­கக் காப் புறுதிக் கட்­ட­ணத் தொகை அதிகம். இதை நாங்கள் ஓட்­டு­நர் களுக்­குக் கட்­டுப்­ப­டி­யா­கக் கூடி­ய­தாக ஆக்­கு­கி­றோம்," என்று கிராப் சிங்கப்­பூர் தலைவர் லிம் கெல் ஜெ தெரி­வித்­தார். புதிய பாலி­சி­யின்­படி தனியார் கார் ஓட்­டு­நர்­கள் அடிப்­படை சந்தா­வில் ஒரே மாதி­ரி­யான 70% தொகையைச் செலுத்­து­வர். அதோடு, பயணம் செய்யும் ஒவ்வொரு கிலோ­மீட்­ட­ருக்­கும் கூடு­த­லாக 6 காசு செலுத்­து­வர். அடிப்­படை சந்தாக் கட்­ட­ணத்­தில் 100% வரை என்று இதற்கு உச்­ச­வ­ரம்பு உண்டு. புதிய திட்டம் உபர், கிராப் கார் பய­ணங்களை உள்­ள­டக்­கும் என்றா­லும் உபர் பய­ணத்­தின்போது விபத்து என்றால் கழிக்­கத் தக்க தொகை $5,000 ஆகவும் இது கிராப்­ கார் பயணம் எனில் $2,000 ஆகவும் இருக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!