சிங்கப்பூருடன் ஒத்துழைப்பை இந்தோ. மறுபரிசீலனை செய்வதாக தகவல்

சுற்றுச்சூழல், காட்டுத் தீ பிரச்சினைகள் தொடர்பில் சிங்கப் பூருடன் நடப்பில் உள்ள இருதரப்பு ஒத்துழைப்பு நடைமுறைகளை இந்தோனீசியா மறுபரிசீலனை செய்வதாக அந்த நாட்டின் சுற்றுப்புற, வனத்துறை அமைச்சர் சித்தி நுர்பையா பாக்கர் தெரிவித்தாக தகவல் வெளியிடப்பட்டிருக் கிறது. அந்த மறுபரிசீலனைக்கு இந்த அமைச்சரே தலைமை வகிப்பார் என்று சுற்றுச்சூழல் செய்தி இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டு இருக்கிறது. அந்தத் தளம் சென்ற டிசம்பரில் அமைக்கப்பட்டது.

இந்தோனீசியாவைத் தளமாகக் கொண்ட சில அமைப்பு களின் முந்தைய இயக்குநர் ஒருவர் அந்த இணையத் தளத்தை ஏற்படுத்தினார். அந்தத் தளத்தில் வெளியிடப்பட்டி ருக்கும் அறிக்கையைப் பார்க்கையில் சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையில் இப்பொழுது இருந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பு அம்சங்களில் சில முடித்துக் கொள்ளப்படும் என்பது தெரிய வருகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள செயிண்ட் அந்தோணியர் தேவாலயத்திற்கு வெளியே நிற்கும் கிறிஸ்தவ மதபோதகர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

21 Apr 2019

'சமூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்ட இலக்கு’

ஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)

21 Apr 2019

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை 

மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்

21 Apr 2019

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது