‘இன, சமய நல்லிணக்கத்திற்கு தொடர்ந்து பாடுபட வேண்டும்’

சிங்கப்பூரின் பல்லின மக்களுக்கு இடையிலான புரிந்துணர்வும் நம்பிக்கையுமே நாட்டின் இன, சமய நல்லிணக்கத்திற்குக் காரணம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். “இதை ஒருபோதும் தீர்வு எட்டப்பட்ட பிரச்சி னையாகக் கருதக்கூடாது என்பதால் இன, சமய நல்லிணக்கத்திற்காக நாம் எப்போதும் தொடர்ந்து பாடுபட வேண்டும்,” என்றும் திரு லீ கூறியுள்ளார். நான்கு நாள் பணிநிமித்த பயணமாக பிரதமர் லீ ரஷ்யா சென்றுள்ளார்.

முன்னதாக, இஸ்தானாவில் கடந்த சனிக் கிழமையன்று ‘டாஸ்’ என்ற ரஷ்ய செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டி அளித் தார். அப்போது அவர் சொன்னதே மேற்கண்ட வார்த்தைகள். அந்த நேர்காணலின்போது பல இன மக்கள் வாழும், பல சமயங்கள் கடைப்பிடிக்கப்படும் சிங்கப்பூரில் நல்லிணக்கம் பேணப்படுவது எப்படி என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த பிரதமர், “உலகத்தில் இருக்கும் எல்லா பெரிய சமயங்களும் சிங்கப்பூரில் பின்பற்றப்படுகின்றன. மூன்று முக்கிய இனங்கள் இருந்தாலும் மேலும் பல சமூகத்தினரும் இங்கு வாழ்கின்றனர். திராவிட மொழியான தமிழ், ஆங்கிலத்திற்குச் சிறிதும் தொடர்பில்லாத சீனம் எனப் பல மொழிகளும் இங்கு பேசப்படுகின்றன. ஆயினும், தொடர் முயற்சிகள், சமுதாயக் கொள்கை மற்றும் ஒருங்கிணைப்பே சிங்கப்பூரில் பல இன மக்க ளிடையே நிலவும் புரிந்துணர்விற்குக் காரணம்,” என்று சொன்னார்.

 

 

 

Loading...
Load next