மனிதவள அமைச்சு மேற்கொள்ளும் விரிவான ஆய்வு

விரிவான ஊழி­ய­ரணி கருத்­தாய்வு ஒன்றை மனி­த­வள அமைச்சு நேற்று முதல் தொடங்­கி­யுள்­ளது. ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை நடை­பெ­றும் இந்த ஆய்வில் 33,000 குடும்பங்கள் ஈடு­படுத்­தப்­ப­ட­வுள்­ளன. தேசிய அள­வி­லான இந்தக் கருத்­தாய்வை மனி­த­வள அமைச்­சின் மனி­த­வள ஆராய்ச்சி, புள்­ளி­வி­வ­ரத் துறை மேற்­கொள்­கிறது. இந்த ஆய்வில் மக்கள் தொகை குறித்த முக்கிய தக­வல்­கள், மக்கள் தொகையின் சமூகப் பொரு­ளா­தா­ரத் தன்மை­கள் போன்ற தக­வல்­கள் தொகுக்­கப்­பட்டு கொள்கை­கள், திட்­டங்கள் வகுக்­கப் பயன்­படுத்­தப்­படும். இந்த ஆய்வில் பங்­கேற்­ப­தற்­ கா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட குடும்பங்களுக்கு அஞ்சல் வழி­யா­கத் தகவல் தெரி­விக்­கப்­படும். இணைய வசதி இருப்­போர் மனி­த­வள கருத்­தாய்வு இணையத் திட்­டத்­தில் கருத்­து­களைத் தெரி­விக்­க­லாம். விரை­வா­க­வும் வச­தி ­யா­க­வும் தக­வல்­களை அளிக்க ஏற்ற தளமாக இது அமையும்.