ஆழமான அர்த்தத்துடன் நோன்புப் பெருநாள் ஒளியூட்டு

இவ்வாண்டு நோன்புப் பெருநாள் ஒளியூட்டு கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிக தூரம் இடம் பெறுவது ஒருபுறம் இருக்க, அது இன்னும் பிரம்மாண்டமாகவும் ஆழமான அர்த்தத்துடனும் அமைந்திருக்கும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 4ஆம் தேதி தொடக்கம், ஸ்டில் ரோடு முதல் சாங்கி ரோடு லோரோங் 101 வரை கேலாங் சிராயின் 2.8 கிலோ மீட் டர் நெடுகிலும் விளக்குகள், அலங்காரங்கள் ஆகியவற்றில் திளைத்து மகிழ முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் ஜூலை 6ஆம் தேதி வரை அங்கு அழைக்கப்படுகின்றனர்.

இவ்வாண்டு ஒளியூட்டு, ‘நடைமுறைப்படுத்துதல், வலுப் படுத்துதல், கம்போங் உணர்வை உயிர்த்தெழச் செய்தல்’ ஆகிய நோக்கத்துடன் ‘நமது கம்போங் உணர்வை ஆழமாக்குதல்’ எனும் கருப்பொருளில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என்று தெரிவித்தார் ஒளியூட்டு ஏற்பாட்டுக் குழுவில் அங்கம் வகிக்கும் மரீன் பரேட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஃபாத்திமா லத்தீஃப்.

முன்னாள் மலாய் கிராமம் இருந்த இடத்தில் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கும் மலாய் பாரம்பரிய காட்சிப் பொருட்களைப் பார்வையிடுகின்றனர் நோன்புப் பெருநாள் ஒளியூட்டுக் குழு 2016ல் அங்கம் வகிக்கும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின் (இடக்கோடி), மரீன் பரேட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் டாக்டர் ஃபாத்திமா லத்தீஃப் (இடமிருந்து 3வது). படம்: பெரித்தா ஹரியான்

Loading...
Load next