‘பியூபி’ நிலத்தடி நீர் கண்காணிப்பு கட்டமைப்புத் திட்டம்

நிலத்தடி நீரின் போக்கைக் கண் காணிக்கும் பொருட்டு அதனை விரிவாக்கம் செய்யப் போவதாக பொது பயனீட்டுக் கழகம் (பியூபி) அறிவித்து இருக்கிறது. இதற்காகக் கூடுதல் கண் காணிப்புக் கிணறுகளும் கருவி களும் அமைப்பதற்கு இன்னும் சில மாதங்களில் இரண்டு ஏலக் குத்தகைகளுக்கு அது அழைப்பு விடுக்கவிருக்கிறது. நீரோட்டம் உள்ள மணல் படு கையில் 50 மில்லி மீட்டர் குறுக் களவு ஆழ்துளைக் கருவியைக் கொண்டு 30லிருந்து 40 கண் காணிப்புக் கிணறுகளை சிங்கப் பூரின் கிழக்கே அமைந்திருக்கும் ஜூரோங் ஈஸ்ட், தீவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஓல்ட் அலுவியம் பகுதி ஆகியவற்றில் கழகம் அமைக்கும்.

தண்ணீர் அளவின் ஏற்ற இறக் கத்தை இதில் பொருத்தியிருக் கும் உணர் கருவிகள் கண்கா ணிக்கும். இதன் மூலமாக சிங்கப்பூர்த் தீவு முழுதும் உள்ள நிலத்தடி நீரின் அளவை அவை கண்காணிக்கும் என்று கழகம் தெரிவித்தது. இதற்கு முன்பு சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் உள்ள ஜூரோங் ஃபார்மேஷன் பகுதியில் பொருத்தியிருந்த -18 -கண்கா ணிப்புக் கிணறுகள் வழியாக அது கண்காணித்து வந்தது.

ஜூரோங் தீவில் இதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெறும் வேளையில் ஜூரோங் ஃபார் மேஷன், ஓல்ட் அலுவியத்தில் இதற்கான ஆரம்பக்கட்டப் பணி களைக் கழகம் தொடங்கவிருக்கிறது. இந்த நிலத்தடி கண் காணிப்பு முயற்சிகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் இந்த மாதி ரிக் கருவிகளின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். கழகத்தின் நிலத்தடி நீர் பற்றிய இந்தக் கண்காணிப்பு முயற்சி ஆராய்ந்து அறியும் கட் டத்தில் இருப்பதாக கழகத்தின் தலைமைப் பொறியியல், தொழில் நுட்ப அதிகாரி ஹேரி சியா தெரி வித்தார். "இந்த முயற்சியின் வழியாக சிங்கப்பூர் நிலத்தடி நீரோட்டத்தை மேலும் நன்கு அறிந்து கொள்ள முடியும்," என்றும் திரு சியா விவ ரித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!