இலங்கையில் ‘ரெட் க்ராஸ்’ நிவாரணப்பணிகள்

சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்தை (ரெட் க்ராஸ்) சேர்ந்த இரண்டு -ஆடவர் கொண்ட குழு இலங்கை சென்று சேர்ந்துள்ளது. இவர்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து 'ரோணு' சூறாவளியால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வர். சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் அனைத்துலக சேவைகள் பிரிவின் தலைவர் சாரிஸ் சான், சங்கத்தின் துணை ஊழியரும் தொண் டூழியருமான பீட்டர் டுங் ஆகி யோர் அடங்கிய குழு மிகவும் பாதிப்புக்கு உள்ளான மேற்கு மாநிலங்களான 'ஈகோடவ் யானா', 'பஹாலா பொமிரியா', 'ஒருவால' ஆகியவற்றில் உள்ள 200 குடும்பங்களுக்குத் தேவையான சமையல் உபகர ணங்களை வழங்கினர்.

250 வீடுகள் உள்ள ஒரு நகரில் 41 வீடுகள் இன்னும் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. வெள்ள நீரின் உயரம் அந்த வீடுகளின் சன்னல் வரை உள்ளது. சில பகுதிகளில் வெள்ளம் வடிந்தாலும் இன்னும் பலர் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். அவர்களின் அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் தண்ணீ ரில் அடித்துச் செல்லப்பட்ட தால் தங்கள் உறவினர் அல் லது நண்பர்கள் வீட்டில் தங்கி யிருக்கின்றனர். சாலையில் தேங்கிக் கிடக்கும் அழுக்கு நீரினால் தொற்றுநோய் பரவும் அச்சுறுத்தல் உள்ளது. குடிநீர் தட்டுப்பாடும் மிகப் பெரிய பிரச்சினையாக உள் ளது. கிணறுகள் மாசடைந்து இருப்பதால் உடனடியாகச் சுத்தப்படுத்த வேண்டும். தற்சமயம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான குடிநீரை செஞ்சிலுவைச் சங்கத்தினர் வழங்கி வருகின் றனர் என்று அங்குள்ள நிலைமையை திருவாட்டி சாரிஸ் சான் விவரித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!