தடையை மீறி பிரசாரம்; வலைத்தளம், இருவர் மீது வழக்கு

புக்கிட் பாத்தோக் இடைத்­தேர்­தல் அன்றும் அதற்கு முந்திய நாளான பிரசார ஓய்வு நாள் அன்றும் தேர்தல் தொடர்­பான செய்­தி­களை வெளி­யி­டு­வதற்­கான தடையை மீறி இருக்­க­லாம் என்று சமூக அர­சி­யல் வலைத்­த­ளம் ஒன்றின் மீதும், இரு தனி­ம­னி­தர்­கள் மீதும் போலிசில் புகார் செய்­யப்­பட்­டுள்­ளது. 'தி இன்­டி­பென்­டண்ட்' என்ற வலைத்­த­ளம் மீதும் குமாரி டியோ சோ லங், திரு ரோய் ங்ரெங் ஆகியோர் மீதும் போலிசில் புகார் செய்­யப்­பட்­டுள்­ள­தாக தேர்தல் துறை நேற்றுக் கூறியது. இது­பற்­றிய இரு கட்­டுரை­கள் மே 6ஆம் தேதி அன்றும் மே 7ஆம் தேதி அன்றும் வெளி­யி­டப்­பட்­ட­தாக நம்பப்­படு­கிறது.

தேர்தல் தொடர்­பான விளம்ப­ரங்களை தேர்தல் பிரசார ஓய்வு நாளன்­றும் தேர்தல் நாளன்­றும் வெளி­யி­டு­வது தடை செய்­யப்­பட்­டுள்­ளது. வேட்­பா­ளர்­கள் எழுப்­பிய பிரச்­சினை­களைத் தீர ஆலோ சித்து வாக்­களிக்க வாக்­கா­ளர்­ களுக்கு நேரம் வழங்­கு­வதே இதன் நோக்கம். அந்தக் கட்­டுரை­களின் தன்மை, அது எவ்வாறு வாக்­கா­ளர்­களைப் பாதிக்­கக்­கூடும் போன்ற­வற்றைக் கருத்­தில்­கொண்டு போலிசில் புகார் செய்­ யப்­பட்­ட­தாக துணைத் தேர்தல் அதிகாரி தெரி­வித்­தார். "வழக்­க­மாக அர­சி­யல் பிரச்­சினை­கள் பற்றி விவா­தித்து அவற்றைச் செய்­தி­க­ளா­கப் பரப்பும் தி இன்­டி­பென்­டெண்ட் போன்ற சமூக வலைத்­த­ளங்கள் தங்க ளுடைய செய­லுக்கு பொறுப்­பேற்­றுக்­கொள்ள வேண்டும்," என்று தேர்தல் துறை நேற்று வெளி­யிட்ட அறிக்கை­யில் தெரி­வித்தது.

மேலும் 'தி இன்­டி­பென்­டண்ட்' வலைத்­த­ளம், துணைத் தேர்தல் அதிகாரி இந்தத் தடையைப் பற்றி நினை­வூட்­டிய பின்­ன­ரும் பிரசார ஓய்வு நாளன்­றும் தேர்தல் நாளன்­றும் தொடர்ந்து தனது கட்­டுரை­ களை வெளி­யிட்டு வந்­துள்­ளது. அந்த வலைத்­த­ளம் பிரசார ஓய்வு நாளன்று இரு கட்­டுரை­களைப் பதி­வேற்­றி­யது. அதில ஒன்று, மே 5ஆம் தேதி மக்கள் செயல்­கட்சி நடத்­திய இறுதிப் பிர­சா­ரத்­தில் துணைப்­ பி­ர­த­மர் தர்மன் சண்­மு­க­ரத்­னத்­தின் பேச்சின் முக்கிய பகு­தி­களைக் கொண்டது. மற்­றொன்று அந்த இடைத்­தேர்­தல் பற்றி பாட்­டா­ளிக் கட்சி உறுப்­ பி­னர் கூறிய கருத்­து­களின் சுருக் ­கம். மேலும், தேர்தல் அன்று திரு டான் செங் போக்கின் கட்­டுரையைப் பதி­வேற்­றி­யது தி இன்­டி­பென்­டண்ட் வலைத்­த­ளம். குற்றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் $1,000 வரை­யி­லான அப­ரா­தமோ 12 மாதங்கள் வரை­யி­லான சிறைத்­தண்டனையோ அல்லது இரண்­டுமோ வழங்கப்­ப­ட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!