சேவைத் துறையின் வருமானம் உயர்ந்துள்ளது

சிங்கப்­பூர் சேவைத் துறையின் வரு­மா­னம் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 0.3 விழுக்­காடு உயர்ந்­துள்­ளது. இதற்கு முந்திய காலாண்­டில் இது எவ்வித வளர்ச்­சி­யும் இல்­லா­மல் இருந்தது. எனினும் காலாண்டு அடிப்­படை­யில் ஒப்­பு­நோக்க, மொத்த வரவு 3.8 விழுக்­காடு குறைந்­துள்­ளது. ஆண்­டுக்­காண்டு அடிப்­படை­யில் பெரும்பா­லான தொழில்­கள் வளர்ச்­சியைக் கண்­டுள்­ளன. சுகா­தா­ரம், சமூக சேவை இரண்­டும் 5.1% வளர்ச்சி கண்டன.

தகவல், தொடர்பு 1.7%, கல்விச் சேவைகள் 1.2%, நிதி, காப்­பு­றுதி 0.95, வர்த்­தக சேவைத் துறைகள் 0.5% வளர்ச்­சியைக் கண்­டுள்­ளன. ஆனால், பொழு­து­போக்கு தனி­ம­னி­தர் சேவைத்­துறை­யில் விற்பனை 9.9% குறைந்தது. போக்­கு­வ­ரத்து, சேமிப்பு கிடங்கு சேவை ஆகிய துறை­களில் 0.8% சரிந்தது. புள்­ளி­வி­வ­ரத் துறை நேற்று வெளி­யிட்ட இந்தப் புள்­ளி­வி­வ­ரத்­தில் மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, தங்­கு­மிட வசதி, உணவு சேவைகள் பற்றிய புள்­ளி­வி­வ­ரங்கள் சேர்க்­கப்­ப­ட ­வில்லை.

Loading...
Load next