$516 மி. மத்திய சேம நிதிச் சந்தா தொகை மீட்கப்பட்டது

செலுத்தப்பட வேண்டிய சந்தா தொகையான $516 மில்லியனை மத்திய சேம நிதிக் கழகம் மீட்டுள் ளது. கடந்த ஆண்டில் வர வேண் டிய இத்தொகை 360,000 ஊழியர் களுக்குப் பயன்தரக்கூடியதாக இருக்கும். முதலாளிகள் சந்தாக்களைக் குறைத்து செலுத்தியது, சந்தாக் களைச் செலுத்தாதது, காலம் தாழ்த்தி சந்தா செலுத்துவது போன்ற காரணங்களால் இவ்வ ளவு பெரிய தொகை கழகத்துக்குச் சென்று சேரவில்லை என்று கழ கம் நேற்று வெளியிட்ட அறிக் கையில் கூறியது.

மீட்கப்பட்ட மொத்த தொகை யில், $15.2 மில்லியன் தொகை முதலாளிகள் சந்தாக்களைக் குறைத்து செலுத்தியது, சந்தாக் களைச் செலுத்தாதது ஆகியவற்றி லிருந்து வந்தது. இந்தத் தொகை 1,840 முத லாளிகளிடமிருந்து பெறப்பட்டது என்றும் 14,708 ஊழியர்களின் நலன் தொடர்புடையது என்றும் கழகம் தெரிவித்தது. மீதமுள்ள $500.8 தொகை கடந்த ஆண்டில் 5,600 முதலாளி களால் தாமதமாகச் செலுத்தப் பட்ட சந்தாக்களிலிருந்து பெறப் பட்டது. அவற்றில் பெரும்பாலான தொகை ஒரு மாதத்துக்குள் வசூ லிக்கப்பட்டு விட்டன. முறையாக சந்தா செலுத்தாத முதலாளிகள் பற்றி விரைவாக அறிந்து, உடனடியாக எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் மூலம் 353,000 ஊழியர்களுக்குத் தம் மால் உதவி செய்ய முடிந்ததாகக் கழகம் கூறியது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்