இணைய மோசடியில் ஈடுபட்ட ஆடவர் கைது

இணையம் வழி பொருட்களை விற்பதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட 33 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று வெளியிடப்பட்ட போலிஸ் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இதன் தொடர்பில் கடந்த சனிக்கிழமை முதல் ஆடவர் ஒருவர் பேரங்காடி பற்றுச்சீட்டுகள், ‘ஐ டியூன்ஸ்’ பரிசளிப்பு மடல் களை சலுகை விலையில் விற் பதாகக் கூறி தங்களை ஏமாற்றி விட்டதாகப் பலர் புகார் செய் துள்ளதாக போலிஸ் அறிக்கை தெரிவித்தது. பொருட்களுக்கான பணத்தை செலுத்திய பின் அந்த ஆட வருடன் தொடர்பு கொள்ள முடிய வில்லை என்றும் பணம் செலுத்தி யவர்கள் கூறினர்.

இதில் சம்பந்தப்பட்ட சந்தேக நபரை போலிசார் வியாழக்கிழமை யன்று பியோ கிரெசண்டில் கைது செய்ததாக போலிசார் கூறுகின் றனர். இவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், இவருக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம். இதுபோன்ற மோசடியில் சிக்காமல் இருக்க கீழ்க்காணும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொள் கின்றனர்: