பூனை மரணம்: 18 மாத கண்காணிப்பில் ஆடவர்

யீ‌ஷூன் ரிங் ரோட்டில் இருக்கும் ஒரு புளோக்கின் 13வது மாடியி லிருந்து பூனை ஒன்றைக் கீழே தூக்கிப்போட்டு அதற்கு மரணம் ஏற்படுத்திய 41 வயது வேலையில்லாத ஆடவர் ஒருவர் நேற்று 18 மாத நன்னடத்தைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். வீ வாய் லியோங் என்ற அந்த ஆடவருக்கு அறிவுமந்த குறை பாடு உண்டு என்று தெரிகிறது. விலங்குவதை குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அந்தப் பூனை சத்தம் போட்டதற்காகவும் அது ஒரு தடவை அந்த ஆடவரின் வீட்டுக் குள் நுழைந்துவிட்டது என்பதற் காகவும் அந்தப் பூனையை மாடியிலிருந்து அவர் தூக்கிப் போட்டுவிட்டார் என்று சமூக நீதி மன்ற விசாரணையில் தெரிவிக் கப்பட்டது.

இந்தச் சம்பவம் சென்ற ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி நிகழ்ந்தது. வழக்கு விசாரணை யில் அந்த ஆடவரின் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், தன் கட்சிக்காரர் தொடக்கப்பள்ளி நான்காம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை என்றும் அவருக்கு அறிவுமந்த குறைபாடு உள்ளது என்றும் வாதாடினார். இனிமேல் எந்தப் பூனைக்கும் அவர் கெடுதல் செய்யமாட்டார் என்பதை அந்த ஆடவரின் பெற் றோரும் அண்ணனும் உறவினர் களும் பார்த்துக்கொள்வார்கள் என்றும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்சி ஓட்டுநர் சுயநினைவை இழந்ததே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 72 வயதான அந்த டாக்சி ஓட்டுநர் உட்பட மேலும் இருவர் காயம் அடைந்தனர். காணொளிப்படம்: ஃபேஸ்புக்/எஸ்ஜி ரோடு விஜிலன்ட்

24 Mar 2019

பாதசாரிகள் மீது டாக்சி மோதியதில் பெண் பலி

அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியிடம் (வலது) கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்திய முஸ்லிம் முன்னோடிகளின் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார் புதிய கண்காட்சியின் காப்பாளர் முகமது நசீம் அப்துல் ரஹீம். படம்: இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம்

24 Mar 2019

இந்திய முஸ்லிம்களின் மரபுடைமையை விளக்கும் புதிய கண்காட்சி