இடமாறு தோற்றப்பிழை சிறார்கள் தாய்மொழி கற்க மேலும் உதவி

இடமாறு தோற்றப்பிழை என்ற குறைபாடுள்ள மாணவர்களில் மேலும் பலர் தங்களுடைய தாய்மொழியைக் கற்றுக்கொள்ள ஆதரவு தேடுகிறார் கள். தமிழ் உள்ளிட்ட தாய்மொழியைக் கற்க அவர்களுக்கு மேலும் ஆதரவு தருவது பற்றி ஆராய்வதாக சிங்கப்பூர் இடமாறு தோற்றப்பிழை குறைபாட்டுச் சங்கம் தெரிவித்திருக்கிறது. டிஸ்லெக்சியா என்று குறிப்பிடப் படும் இந்தக் குறைபாடு உள்ளவர் களுக்கு ஒரு வார்த்தையில் உள்ள எழுத்துகள் இடம் மாறிமாறி தெரியும். ஒலியை உணர்ந்துகொள்ளும் ஆற்றல் பாதிக்கப்பட்டிருக்கும்.

இதனால் படிப்பதும் எழுதுவதும் எழுத்துக்கூட்டுவதும் அவர்களுக் குச் சிரமமாக இருக்கும். பொதுவாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது அவர்களுக்குச் சிரமமாக இருக்கும். சிங்கப்பூரில் மேலும் அதிக மாணவர்களுக்கு இத்தகைய குறை பாடு இருப்பதாக ஆண்டுதோறும் கண்டறியப்பட்டு வருகிறது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தகைய குறைபாடு பற்றிய புரிந்துணர்வு அதிகரித்து இருப்பதும் முறையான பரிசோதனைகள் அதிகம் இடம்பெறுவதும் இதற்குக் காரணம் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. "எல்லா மொழிகளிலுமே ஒலிப் பயனீடு இருக்கிறது. ஆகையால் இத்தகைய குறைபாடு எல்லா மொழி களையும் பாதிக்கும். இருந்தாலும் பல மொழிகளும் பல விதமாக உரு வாக்கப்பட்டிருப்பதால் அவற்றைக் கற்பதில் மாணவர்கள் வெவ்வே றான சிரமங்களை எதிர்நோக்கு கிறார்கள்," என்று சிறப்புக் கல்விச் சேவை இயக்குநர் அஷ்ரப் சம்சுதின் விளக்கினார்.

இடமாறு தோற்றப் பிழை குறைபாடு உள்ள சிறார்களில் முன்னிலும் அதிக பேர் தாய்மொழி கற்க ஆதரவு தேடுகிறார்கள் என்று சங்கம் தெரிவித்துள்ளது. படம்: இணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!