தொழிற்சாலையில் தீ

ஜூகூனில் பதனீட்டுத் தொழிற்சாலை ஒன்றில் நேற்றுக் காலை மூண்ட தீயைச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அணைத்தது. எண் 6 ஜூகூன் சர்க்கிள் முகவரியில் அதிகாலை 5.40 மணிக்குத் தீ மூண்டதாக இந்தப் படை நேற்றுக் காலை 8.30 மணி அளவில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டது. தீ 400 சதுரமீட்டர் பரப்புள்ள இடத்தை ஆக்கிரமித்தது. இந்தப் படையினர் அந்த வட்டாரத்தைச் சூழ்ந்து கொண்டு எட்டு தண்ணீர் பீச்சு வண்டிகளுடன் தீயைக் கட்டுப்படுத்தினர். 90 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது. யாருக்கும் காயமில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஏசிபி என்ற எழுத்துடன் காணப்பட்ட கட்டடத்தில் தீயணைப்பாளர்கள் தீ அணைத்ததைக் காட்டும் படங்களும் ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்றிருந்தன.

ஜூகூனில் பதனீட்டுத் தொழிற்சாலை ஒன்றில் தீ மூண்டது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தீயை அணைத்தது. படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஹோர்ட்பார்க்’ விளையாட்டுப் பூங்காவில் மண்ணிலும் மரத்திலும் விளையாடி மகிழும்  மை ஃபர்ஸ்ட் ஸ்கூலில் படிக்கும் பாலர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Mar 2019

இயற்கையுடன் இணைந்த விளையாட்டுப் பூங்கா