பொறியாளருக்கு $4,000 அபராதம்

செனாங் கிரசெண்டில் தொழில் துறைக் கட்டடத்தில் தண்ணீர்ச் சேவைச் சாதனங்களைப் பொருத் தும் பணியை மேற்பார்வையிட தவறியதற்காக நிபுணத்துவப் பொறியாளரான யிங் கீ இயோவ் என்பவருக்கு $4,000 அபராதம் விதிக்கப்பட்டது. செனாங் கிரசெண்டில் 'பிஸ்ஹப்' என்ற தொழில்துறைக் கட்டடத்தில் சென்ற ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி தான் சோதனை நடத்தியதாகவும் அக் கட்டடத்தின் அடித்தளத்தில் கீழ்நிலை தண்ணீர்த் தொட்டிக்கு மேலே கழிவுநீர்க் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்ததை தான் கண்டதாகவும் பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்றுத் தெரிவித்தது.

தண்ணீர்த் தொட்டிக்கு அவ சியமான நீர்ச்சோதனைக் குழாய் கள் பொருத்தப்படவில்லை. இந்த இரண்டும் தண்ணீர்ச் சேவைக்கான நடைமுறை நியதி களை மீறிய செயலாகும். குடிநீர்க் குழாய்களுக்கு மேலே அல்லது தண்ணீர்த் தொட்டிக்கு மேலே கழிவுநீர்க் குழாய்களைப் பொருத்துவது குடிநீரின் பாது காப்புக்கு உகந்ததல்ல.

அப்படி அமைப்பதால் குடிநீர்க் கெட்டுப்போக வாய்ப்பு உண்டு என்று தெரிவித்த கழகம், இத்த கைய குழாய்கள் முறையாகப் பொருத்தப்படுவதை மேற்பார்வை யிட தவறினால் அது கடுமையான ஒரு குற்றம் என்று கூறியது. செனாங் கிரசெண்டில் நீர்ச் சேவைப் பணிகளை மேற்கொண்ட உரிமம் பெற்ற குழாய் வேலை ஒப்பந்தக்காரர்களின் உரிமம் ஆறு மாதத்திற்கு நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!