அங் மோ கியோ காசநோய்: மருத்துவருக்குப் புகழாரம்

அங் மோ கியோவில் காசநோய் இருப்பது, மருத்துவர் சிந்தியா சீயின் மதிநுட்பத்திறனால் கண்டு பிடிக்கப்பட்டதாக அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோ போ கூன் தெரி வித்துள்ளார். நாள்தோறும் பல வகையான நோயாளிகளைச் சந்திக்கும் மருத்துவர் ஒருவர் நான்கைந்து ஆண்டு காலமாக சிகிச்சைக்கு வந்த ஆறு நோயா ளிகளை ஒன்றுபடுத்தி இந்த நோய் பற்றி கண்டுபிடித்திருப்பது அற்புதமானது என்றும் அவர் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

டாக்டர் சிந்தியா, டான் டோக் செங் மருத்துவமனையில் காச நோய் கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரிகிறார். வழக்கத்துக்கு மாறான 'பல மருந்துக்குக் கட்டுப் படாத காசநோய்' ஒருவரிடம் காணப்பட்டவுடன் அவர் வசித்த அதே புளோக்கைச் சேர்ந்த மேலும் ஐவர் இதே நோய்க்காக பல்வேறு காலகட்டங்களில் சிகிச்சைபெற வந்ததை உணர்ந்த மருத்துவர் அது குறித்து சுகா தார அமைச்சிடம் தெரிவித்தார். "முதலில், இந்நோய் கண்டது பற்றி நாங்கள் தெளிவற்று இருந் தோம். ஆகக் கடைசி நோயாளி கடந்த மே மாதம் சிகிச்சைக்காக வந்தபோது எங்கள் குழு விழிப் படைந்தது. அதைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சிடம் இதனைக் கொண்டு சென்றோம்," என்று சேனல் நியூஸ் ஏ‌ஷியாவிடம் டாக்டர் சிந்தியா தெரிவித்தார்.

மருத்துவரின் தகவலுக்குப் பிறகு விழிப்படைந்த அமைச்சு, அங் மோ கியோ அவென்யூ 3ல் உள்ள புளோக் 203 மீது கவனம் செலுத்தத் தொடங்கியது. இம் மாதம் விரல்ரேகை சோதனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த காசநோய் ஆறு பேருக்கு இருந்தது தெரிய வந்தது. அவர் கள் அனைவரும் சிங்கப்பூரர்கள் என்றும் அவர்கள் 20க்கும் 70க்கும் இடைப்பட்ட வயதினர் என்றும் அதிகாரபூர்வமற்ற தக வல் ஒன்று தெரிவிக்கிறது. மேலும், அந்த அறுவரில் ஒருவர் பெண் என்றும் கூறப்படுகிறது. அவர்களில் சிலருக்கு சிகிச்சை முடிந்துவிட்டதாலும் ஒருசிலர் சிகிச்சை மேற்கொண்டு வரு வதாலும் அவர்களால் பொது சுகாதார இடர்ப்பாடு எதுவுமில்லை என அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், அவர்களிடமிருந்து நோய் பரவாது என்றும் அது குறிப்பிட்டு உள்ளது.

புளோக் 203ன் கீழ்த்தளத்தில் நடத்தப்பட்ட பரிசோதனை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!