சிங்கப்பூரருக்கு 61 வயதில் இதய நோய்

சிங்கப்பூரர்கள், மற்ற ஆசிய நாட்டவரைப் போலவே சராசரியாக 61 வயதில் இதயம் செயலிழக்கும் நோயை எதிர்நோக்குகிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது. இந்த வயது, அமெரிக்கர்களுக் கும் ஐரோப்பியர்களுக்கும் 70 ஆக இருக்கிறது. அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், மொத்த ஆசியர் கள் ஆகியோருடன் ஒப்பிடுகை யில் முற்றிய இதய நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவை சிங்கப்பூரர்களிடையே அதிகமாக இருக்கிறது. இந்த மூன்று நோய்களும் இதயம் செயல் இழக்க முக்கிய மான காரணங்களாக இருக் கின்றன.

சிங்கப்பூரில் ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 58 விழுக்காட் டினருக்கு நீரிழிவு நோய் இருந் தது. இந்த அளவு ஆசியாவிலும் அமெரிக்காவிலும் 40%. ஐரோப் பாவில் 33%. சிங்கப்பூர் தேசிய இதய நல நிலையத்தில் இணைப் பேராசிரியை கரோலின் லாம் நேற்று இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். இவரே இந்த ஆய்வின் பிரதான ஆய்வாளர். ஆய்வில் இந்த வட்டாரத்தைச் சேர்ந்த 5,000க்கும் அதிக நோயாளிகள் ஈடுபடுத்தப்பட்டனர். 2016-06-17 06:00:00 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!