தொடக்கப்பள்ளி 1ஆம் வகுப்பு பதிவு ஜூன் 30-ஆகஸ்டு 26 வரை

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு தொடக்கநிலை முதலாம் வகுப்பில் சேரும் சிறார்களுக்கான பதி-வு ஜூன் 30ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 26ஆம் தேதி முடிவடையும் என்று கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது. இந்த மாணவர்கள் பதிவுக் காலத்தின்போது தொடக்கப்பள்ளிகள் அனைத்தும் திங்கட்கிழமைகள் முதல் வெள்ளிக்கிழமைகள் வரை காலை 8 மணியிலிருந்து முற்பகல் 11 மணி வரையிலும் பிற்பகல் 2.30 மணியிலிருந்து மாலை 4.30 வரையிலும் திறந்திருக்கும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதிக்கும் 2011 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கும் (இரண்டு தேதிகளும் உட்பட) இடையில் பிறந்த பிள்ளைகள் தொடக்கப்பள்ளிகளில் சேர்ந்து பயில பதியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடக்கப்பள்ளிகள், அவற்றில் இருக்கும் இடங்கள் முதலான விவரங்களை https://www.moe.gov.sg/admissions/primary-one-registration/ என்ற தொடக்கப் பள்ளி 1 பதிவு இணையத்தளத்தில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!